சிம்புவுக்கு இனி வேற சாய்ஸ் இல்ல.. ஹேப்பி மூடில் நாள் குறித்த டி.ராஜேந்தர்

நடிகர் சிம்பு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி முகத்தில் ஏறி கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது கிலோவுக்கு மேலாக எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுத்த சிம்பு அடுத்தடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். சமீபத்தில் ரிலீசான இவருடைய பத்து தல திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதனால் தற்போது சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்து இருக்கிறது.

சிம்பு மீது அடிக்கடி பல பிரச்சனைகளும், சர்ச்சைகளும் வந்து கொண்டிருந்த நேரத்தில் அவருடைய பெற்றோர்களான ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ரொம்பவே கலக்கத்தில் இருந்தனர். அதன் பின்னர் அடுத்தடுத்து வெற்றியை கொடுத்து வரும் சிம்புவை கண்டு மனம் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். இருந்தாலும் 39 வயதாகும் சிம்புவுக்கு திருமணம் ஆகவில்லை என்பது அவருடைய பெற்றோர்களுக்கு ஒரு மிகப்பெரிய கவலையாகவே இருக்கிறது.

சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்ற சிம்புவின் அப்பா ராஜேந்தர் கூட விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும் பொழுது சிம்புவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்றுதான் சொல்லி இருந்தார். தற்போது இந்த கவலைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்படி ஒரு குட் நியூஸ் வந்திருக்கிறது.

ஏற்கனவே பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது சிம்புவுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அவருடைய பெற்றோர்கள் ரொம்பவே நெகிழ்ந்து போயிருந்தார்கள். மேலும் இந்த படத்தின் வெற்றி என்பது இன்னுமே சிம்புவின் வீட்டை ஹாப்பி மூடில் மாற்றி இருக்கிறது. இதுபோன்ற நேரத்திலேயே சிம்புவுக்கு திருமணத்தை நடத்திவிடலாம் என முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இயக்குனர் மற்றும் நடிகர் ராஜேந்தர் தற்போதைக்கு தன்னுடைய உடல்நிலை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை சிம்புவுக்கு திருமணம் நடந்தாலே போதும் என்று முடிவெடுத்திருக்கிறார். சிம்பு எந்த பெண்ணை காட்டினாலும் எங்களுக்கு ஓகே தான் என்று சொன்ன உஷா ராஜேந்தர், அவர்களும் ஐந்து பெண்களை செலக்ட் செய்து வைத்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

சிம்பு நடிப்பில் ரிலீசான ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு சிம்புவும் நடிகை நிதி அகர்வாலும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் விரைவில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அது பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →