மாற்றுத்திறனாளிகளின் உலகம் எப்படி இருக்கிறது.? சித்தாரே ஜமீன் பர் முழு அலசல்

Sitaare Zameen Par Movie Review : கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான தாரே ஜமீன் பர் படத்தின் இன்னொரு அத்தியாயமாக வெளியாகி இருக்கிறது சித்தாரே ஜமீன் பர். படத்தில் கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கிறார் அமீர்கான்.

அதாவது முன்கோபம் அதிகம் உள்ள அமீர்கான் ஜூனியர் பயிற்சியாளராக உள்ள நிலையில் அவருடைய சீனியர் இடம் வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை முற்றி போக சட்டென்று சீனியர் கன்னத்தில் அறைந்து விடுகிறார் அமீர்கான்.

இப்படி ஒரு பிரச்சனை இருக்க அன்று இரவே மது அருந்திவிட்டு காரை ஓட்டும் போது ஒரு விபத்தை ஏற்படுத்தி போலீசில் சிக்கிக் கொள்கிறார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு கூடை பயிற்சி அளிக்க வேண்டும் என தீர்ப்பு வருகிறது.

அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் விமர்சனம்

அவ்வாறு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் அமீர்கான் தேசிய சாம்பியன் போட்டிக்கு தயார் செய்கிறார். அப்போது அவர்களின் உணர்வுகளை புரிந்து ஒரு நல்ல மனிதனாக அமீர்கான் மாறுகிறாரா என்பதுதான் படத்தின் கதை.

சீரியஸான கதைகளம் என்றாலும் காமெடிகளை அங்கங்கே தூவி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். மேலும் படத்தில் தேவைக்கு மீறி சில காட்சிகள் இருப்பது உறுதலாக அமைந்திருக்கிறது. தொடக்கத்தில் மனநிலை குன்றியவர்களை கிண்டல் செய்யும் காட்சி நெருடலாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் ஜெனிலியா நடித்துள்ளன் நிலையில் அவருக்கு பெரிய காட்சிகள் எதுவும் அமைக்கவில்லை. ஆனாலும் கொடுத்த கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்கு பிளஸ் என்றால் மாற்றுத்திறனாளிகளின் உலகம் எப்படி இருக்கும் என்பதை இயக்குனர் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →