தனுஷுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா.. 7 வருடம் கழித்து எடுக்கும் புது அவதாரம்

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷ் முதன்முதலாக போலீஸ் கெட்டப்பில் நடித்து வருகிறார். ப்ரியங்கா மோகன், ஜான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தாண்டுக்குள் இப்படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தனுஷின் மற்றொரு படமான வாத்தி படமும் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. வாத்தி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட தனுஷின் அடுத்தடுத்த படங்களை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், மீண்டும் தொடர்ச்சியாக மற்றொரு படத்தையும் தனுஷ் கூட்டணியில் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.

7 வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமாகி 2017 ஆம் ஆண்டு நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் பா.பாண்டி படத்தை இயக்கினார். இப்படத்தில் தனுஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வலம் வந்து அசத்தியிருப்பார். இப்படம் நல்ல ஒரு வெற்றியை பெற்ற நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு தனுஷ் இயக்குனர் அவதாரத்தை கையிலெடுத்து இயக்க உள்ளார்.

இப்படத்தில் விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்திலும் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான டான் உள்ளிட்ட படங்கள் அவரது மார்க்கெட்டை எகிற வைத்தது. இதனிடையே முதன்முதலாக தனுஷின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைய உள்ளது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கட்டா குஸ்தி படம் சக்கை போடு போட்டது. இப்படத்தை தொடர்ந்து தனுஷின் முன்னாள் மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் படத்தில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இப்படத்தில் ரஜினிகாந்தும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனுஷ் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால் இணைய உள்ளாராம்.

தனுஷ் இயக்கும் இப்படத்திற்கு சேகர் கம்முலா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை இப்படத்தில் தனுஷ் இயக்குவது மட்டுமில்லாமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இன்னும் இப்படத்திற்கு தேர்வாகாத நிலையில் அனிருத் இசையமையாக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷின் இரண்டாவது இன்னிங்ஸ் இயக்குனர் அவதாரம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் தீவிரமாக வெயிட் பண்ணி வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →