Kanika Snehan: அம்மாடியோ ஹேர் ஆயிலின் விலை இவ்வளவா.! கட்டுபடியாகாது, பதறிப் போய் விளக்கம் கொடுத்த கன்னிகா சினேகன்

Kannika Snehan: நடிகர்கள் எல்லாம் தங்களுடைய சம்பாத்தியத்தை பல பிசினஸ்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதேபோல் தற்போது ஹீரோயின்களும் சொந்த தொழில் தொடங்க ஆரம்பித்து விட்டனர்.

அதில் நயன்தாரா சமீபத்தில் நாப்கின், ஸ்கின் கேர் என பல தொழில்களை ஆரம்பித்துள்ளார். நடிப்பைவிட இதில் தான் அவர் அதிக கவனமும் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இதில் அவருக்கு நல்ல லாபமும் கிடைத்து வருகிறது. அதே போல் சினேகா சமீபத்தில் ஜவுளி கடை ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

கன்னிகாவின் ஹேர் ஆயில்

அந்த வரிசையில் கவிஞர் சினேகனின் மனைவி கன்னிகாவும் ஹேர் ஆயில் பிசினஸை தொடங்கியுள்ளார். ஏற்கனவே இது குறித்து தகவல்கள் வெளிவந்த நிலையில் அதன் விலை கட்டுபடியாகாது என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அதற்கு கன்னிகா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதன்படி இந்த பிசினஸை தொடங்க வேண்டும் என்று நாங்கள் பல மாதங்களாகவே முயற்சி எடுத்து வருகிறோம்.

நாங்கள் தயாரிக்கும் ஆயிலை பலரிடம் கொடுத்து பரிசோதனை செய்து அதன் பிறகு தான் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதேபோல் நாங்கள் உபயோகிக்கும் மூலிகைகள் அனைத்தும் ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தப்படுகிறது.

அதிக விலை பற்றி கொடுத்த விளக்கம்

மேலும் இதற்கு அதிகமான ஜிஎஸ்டி கட்ட வேண்டி இருக்கிறது. இது தவிர தொழிலாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். அதைப் பொறுத்து தான் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எங்களுடைய எண்ணெய்யை தினமும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து விட வேண்டும்.

இரவில் தேய்த்து விட்டு காலையில் எழுந்ததும் குளிக்கலாம். இதைத்தொடர்ந்து செய்தால் முடி கொட்டுவது நின்றுவிடும் என அவர் தெரிவித்துள்ளார். அதன்படி 200ml எண்ணெய் 999 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →