லோகேஷ் வளையத்தில் சிக்கிய மாமன் சூரி.. ஒருவேளை LCU-வா இருக்குமோ.?

காமெடியனாக இருந்து தற்போது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டி விடுகிறார் மாமன் சூரி. சமீபத்தில் நடித்த மாமன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. விடுதலை படத்தின் மூலம் வெற்றிமாறன் சூரியை நன்றாகவே செதுக்கியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

அப்படி சூரியன் நடிப்பை பார்த்து நானே தயாரிக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் தற்போது முன்வந்துள்ளார். லோகேஷ் கூலி படத்தில் பிசியாக வேலை பார்த்து வருகிறார். சன் பிக்சர்ஸ் அவரை மலை போல் நம்பியுள்ளது. இப்படி இயக்கம் ஒருபுறம் இருந்தாலும், 10 படத்திற்கு மேல் எடுக்க மாட்டேன் என தனது பாதையில் தெளிவாக உள்ளார் லோகேஷ்.

இந்த முற்றுப்புள்ளி இயக்கத்திற்காக மட்டுமே தவிர தயாரிப்புக்கு இல்லை என்பதால் மலையாள இயக்குனர் Lijo Jose Pellissery வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளார், இதற்கு ஹீரோவாக சூரி ஒப்பந்தமாகியுள்ளாராம். ஏற்கனவே Lijo Jose Angamaly Diaries, Jallikattu போன்றது மூலம் பிரபலமானவர்.

லோகேஷ்-க்கு படத்தின் கதை பிடித்து போக சூரியிடம் கூறியதாகவும் அவரும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். யாருமே எதிர்பாராத இந்த காம்போ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர். கருடன், விடுதலை, மாமன் போன்ற அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டார் சூரி.

அதற்காகவே இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஏழு கடல் ஏழு மலை மற்றும் மண்டாடி போன்ற படங்கள் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. இந்த படங்களின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலை முடிந்த பின் லோகேஷ் கூட்டணியில் இணைய உள்ளார்.

இதைத் தவிர மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் சூரி நடிக்க உள்ளதாக அதாவது வடசென்னை இரண்டாம் பாகத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிம்பு, ஜெய் பீம் மணிகண்டன், நெல்சன், தனுஷ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →