சந்தானத்தை விட தெளிவாக சூரி போடும் ஸ்கெட்ச்.. பறந்த பார்த்தாவின் இறக்கையை உடைத்த சினிமா

சிவகார்த்திகேயனைப் பார்த்து பறக்க ஆசைப்பட்ட சந்தானம் இன்று இறக்கை உடைந்து தரையில் நடக்க ஆரம்பித்து விட்டார். ஹீயூமர் காமெடியில் பட்டையை கிளப்பி வந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின் தனியாக படத்தில் காமெடி பண்ணுவதை நிறுத்திவிட்டார்.

சிவகார்த்திகேயனும், சந்தானமும் நெருங்கிய நண்பர்கள். ஒரு கட்டத்தில் சந்தானம், நாம் ஏன் சிவகார்த்திகேயன் மாதிரி வளரக்கூடாது என அவர் மனதில் தோன்றியதால், நடித்தால் ஹீரோ என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஒன்று இரண்டு படங்கள் ஹிட் ஆகவே ஹீரோ என்ற அந்தஸ்தில் வானில் பறக்க ஆரம்பித்தார்.

இவர் படங்கள் ரிலீஸ் சமயத்தில் 3 பஸ்களில் ஊரிலிருந்து இவருடைய ரசிகர்கள் வந்து அட்ராசிட்டி செய்வார்களாம். பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் தலைவரை இப்படி கேள்வி கேட்கக் கூடாது என்று சண்டைக்கு வருவார்களாம். அந்த அளவிற்கு சந்தானம் ஆட்டம் போட்டு வந்தார்.

பறந்த பார்த்தாவின் இறக்கையை உடைத்த சினிமா

ஒரு காலத்தில் தனக்கு பெரிய கூட்டம் இருக்கிறது என நம்பிய சந்தானம், நான்கு படங்கள் தொடர் தோல்வியால் இன்று அந்த கூட்டத்தை தேடிக் கொண்டிருக்கிறார். காசும், மாசும் இருந்தால் தான் கூட்டம் என்பதை புரிந்து கொண்டார்.

இப்பொழுது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் சூரிக்கும் இப்படி ஒரு கூட்டம் தோன்றி கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது. இது சூரியின் ஏற்பாடா இல்லை தானா சேர்ந்த கூட்டம் என்று தெரியவில்லை. இவர் வரும் இடங்களில் எல்லாம் இவருக்கென்று கோஷம் போட ஒரு கூட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தெளிவாக இருக்கும் சூரி நமக்கு படத்தில் என்ன வரும், நம்ம தகுதி என்ன, என்று அடிமட்டத்திலிருந்து யோசித்து வெற்றிமாறன் கூட டிராவல் பண்ணி வருகிறார். சந்தானம் போல் இல்லாமல் மிகவும் எளிமையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து ஹீரோவாக நடித்தாலும் அவரிடம் உள்ள பணிவு அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →