பாக்ஸ் ஆபீஸில் பாலிவுட் படங்களை ஓட ஓட விரட்டும் தென்னிந்தியத் திரைப்படங்கள்.. தல அஜித்னா சும்மாவா!

கடந்த சில மாதங்களாக திரைக்கு வந்த பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபீஸில் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகைகள் பாலிவுட்டில் வெளியான இரண்டு படங்களின் வசூலையும் தும்சம் செய்து தென்னிந்திய படங்கள் தலைதூக்கி நிற்கிறது.

அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘கங்குபாய் கத்தியவாடி’ திரைப்படம், கடந்த சில மாதங்களாக பாலிவுட் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் கொண்டிருந்த நிலையில், இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையும் பாக்ஸ் ஆபீஸில் உலகளவில் சுமார் 196 கோடி வசூலையும் பெற்றுத் தந்த படமாகும்.

இந்த படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு கபீர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ’83’ படம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்-வின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்பட்டது.

இந்தப்படத்தில் இந்திய அணி 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை விறுவிறுப்பாக உடன் படமாக்கி இருப்பார்கள். இந்தப் படம் பாலிவுட் மட்டுமன்றி உலக அளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களால் ஏகமுக வரவேற்பளித்து பான்இந்தியா திரைப்படமாக சுமார் 190 கோடி வசூலை உலக அளவில் ஈட்டித்தந்தது.

இந்த இரண்டு பாலிவுட் படங்களின் வசூலையும் மிஞ்சி தென்னிந்திய தமிழ் படமான தல அஜித்தின் வலிமை திரைப்படம் சுமார் 225 கோடி வசூலை பாக்ஸ் ஆபீஸில் உலக அளவில் பெற்றிருக்கிறது. அத்துடன் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படமும் உலகளவில் 152 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றிருக்கிறது.

இதுமட்டுமின்றி தல அஜித்தின் வலிமை படத்தை மிஞ்சும் அளவுக்கு ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான தெலுங்கு திரைப்படமான ஆர்ஆர்ஆர் உலக அளவில் 1100 கோடி வசூலைத் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் சாதனை புரிந்திருக்கிறது. இவ்வாறு பாலிவுட் படங்களை ஓட ஓட விரட்டும் அளவுக்கு தென்னிந்திய திரைப்படங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என சினிமா பிரபலங்களால் சமீப கால அளவில் பேசப்படுகிறது

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →