பழைய சண்டையை மறந்து விஜய் சேதுபதிக்கு பழம் விட்ட ஸ்ருதிஹாசன்.. பெரியண்ணன் மிஷ்கினால் வந்த வம்பு

Vijay Sethupathi: மிஷ்கின் இயக்கம் ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் என இப்போது பரபரப்பாக இருக்கிறார். எப்போதுமே வாய் துடுக்காக பேசி சர்ச்சையை கிளப்பும் இவர் இப்போது ஒரு பெரிய விஷயத்தை செய்திருக்கிறார்.

அதாவது இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. படத்தின் பெயருக்கு ஏற்ப ஆம்பூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் பாதையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

திகில் கலந்த திரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும் மிரட்டலாக இருக்குமாம். மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்திய மிஷ்கின் படத்தில் திருநங்கைகளை வைத்து ஒரு பாடலையும் எடுத்துள்ளார்.

அதாவது இப்படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் தான். அதில் ஒன்றை மிஷ்கின் பாடியிருக்கிறார். இன்னும் ஒன்றை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். மிஸ்கின் பாடி இருக்கும் பாடல் காட்சியில் தான் திருநங்கைகள் இடம்பெறுகிறார்கள்.

ஸ்ருதிஹாசன் பாடிய பாடல்

ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் படத்தின் இறுதியில் வரும் என்று சொல்லப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

அது கொரோனா காலகட்டம் என்பதால் அனைவரும் ரொம்பவும் பாதுகாப்பு உணர்வோடு இருந்தனர். ஆனால் விஜய் சேதுபதி எப்பவும் போல் எதார்த்தமாக அனைவரையும் கட்டிப்பிடிப்பது பேசுவது என இருந்தார்.

இதனால் டென்ஷனான ஸ்ருதி இது நிச்சயம் பாதுகாப்பு கிடையாது என வாக்குவாதம் செய்தார். அதை தொடர்ந்து கடுப்பாகி படத்தில் இருந்தும் வெளியேறினார். இது அப்போது பரபரப்பை கிளப்பியது.

இதனால் இனி அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவே மாட்டார் என்று கூட செய்திகள் வெளியானது. ஆனால் இப்போது மகாராஜாவுக்காக தன் கோபத்தை மறந்து மலையிறங்கிய ஸ்ருதி இப்படத்தில் ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளார்.

எப்படியோ அரும்பாடு பட்டு இப்படி ஒரு நல்ல காரியத்தை மிஷ்கின் செய்திருக்கிறார். ஆக மொத்தம் மகாராஜா மூலம் கம்பேக் கொடுத்த விஜய் சேதுபதிக்கு ட்ரெயின் நிச்சயம் ஹிட் படமாக அமையும். விரைவில் இதன் சூட்டிங் நிறைவு பெற உள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →