சூர்யாவின் படத்தை பார்த்து 2 நாள் தூக்கத்தைத் தொலைத்த ஸ்டாலின்.. நானும் பாதிக்கப்பட்டவன் தான்

பெரும்பாலும் கமர்சியல் திரைப்படங்களை தவிர்த்து நல்ல கதை கொண்ட படங்களில் நடிப்பதில் ஒரு சில நடிகர்கள் முனைப்புடன் செயல் படுகின்றனர். அவர்களின் வரிசையில் நடிகர் சூர்யாவும் நல்ல கதை கொண்ட படங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

சூர்யா நடித்திருக்கும் படத்தை பார்த்து இரண்டு நாட்கள் தூக்கத்தை தொலைத்ததாக தற்போதைய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் பழங்குடியினர்கள் சந்திக்கும் பிரச்சினையும், போலீஸ் டென்ஷனில் அப்பாவிகளுக்கு நடக்கும் கொடுமைகளும் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதால் இந்த படத்தைப் பார்த்த ஒவ்வொருவரையும் கலக்கமடைய வைத்திருக்கும். மேலும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது வாழ்நாளில் இதுவரை பார்த்த படங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ஜெய்பீம்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இரண்டு, மூன்று நாட்கள் தூங்கவே இல்லை. ஏற்கனவே சிறைச்சாலை சித்திரவதைகளை தன்னுடைய வாழ்க்கையில் உண்மையாகவே அனுபவித்ததால் ஜெய்பீம் திரைப்படம் முக ஸ்டாலின் அவர்களை கூடுதலாக பாதித்திருக்கிறது.

இதனால் அந்தப் படத்தை பார்த்த பிறகு கேட்பாரற்று இருப்பவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் வெளியில் தெரியாது என்பதால் அதிகார வர்க்கத்தினர் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவுடன் இருப்பதால், அவர்களது கொட்டத்தை அடக்க வேண்டும் என மனம் துடிக்கிறது.

இப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். ஜெய் பீம் திரைப்படம் முதலமைச்சராக இருப்பதால் அவரை மட்டுமல்ல படத்தைப் பார்த்த பாமர மக்களையும் தூங்கவிடாமல் செய்திருப்பது அந்தப் படத்திற்கு கிடைத்த ஈடு இணையற்ற விருதாகும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →