ஜா**தி அரசியலுக்கு அடித்தளம் போட்ட சுந்தர் சி.. குஷ்புவின் ம**த அரசியலுக்கு ஆப்பு

சுந்தர் சி தற்போதைய ட்ரெண்டிங் தெரிந்து ரசிகர்களின் பல்சை பிடித்து படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர். அப்படித்தான் அடுத்தடுத்து 100 கோடி வசூலை தொடும் அளவிற்கு படங்களை எடுத்து வெளியிட்டார். தற்போது தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார்.

சுந்தர் சி-க்கு எப்படியாவது அரசியல் கட்சி தொடங்கி விட வேண்டும் அல்லது பெரிய கட்சியில் இணைந்து விட வேண்டும் என்ற ஆசையோ என்னவோ தெரியவில்லை சமீபத்தில் நடந்த முத**லியார் சமூக மாநாட்டில் பேசிய சுந்தர் சி, தமிழ்நாட்டில் நாம்தான் பெரும்பான்மை சமூகம்.

ஆனால் நமக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு மிக்குறைவு. நமக்காக ஓங்கி ஒலிக்கும் குரல்தான் அண்ணன் ஏ.சி.சண்முகம். இனி நம் சமூக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்வேன் என்று கூறியிருப்பதை ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிய நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியை 2001 ஆம் ஆண்டு தொடங்கிவர் ஏ.சி.சண்முகம். இதன் மூலம் தெரிய வந்தது என்னவென்றால் பல வருடங்களாக அரசியல் ஆசை சுந்தர் சி மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அதுவும் ஒரு சமூகத்திற்கு மட்டும் உழைக்க வேண்டும், உயர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அரசியல் கட்சி விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய எல்லா படமும் ஏ.சி.சண்முகத்தின் Benzz Media தயாரிப்பில் உருவானது தானம். முக்கியமாக அரண்மனை 3, அரண்மனை‌4, காஃபி வித் காதல், மதகஜராஜா, கேங்கர்ஸ் போன்ற படங்கள் இதில் உள்ளடக்கம்.

ஏற்கனவே மத்தியில் ஆளும் கட்சி குஷ்புவின் சொத்தை முடக்க நேரிட்டது அதனால் கட்சியில் இணைந்தார் என்று செய்தி கோலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது சுந்தர் சி-யும் அரசியல் களத்தில் குதித்தால் எப்படி இருக்கும் என்ற உங்கள் கருத்தை பதிவு செய்யுங்க!

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →