ஜேசன் சஞ்சயின் ட்ரீம் ப்ராஜெக்ட்.. எந்த மாதிரியான படம்.? சந்தீப் கிஷன் கொடுத்த அப்டேட்

Jason Sanjay: விஜய்யின் மகன் ஹீரோவாக வர வேண்டும் என்பது ரசிகர்களின் பேராசையாக இருக்கிறது. ஆனால் அவருக்கோ கேமரா பின்னாடி நின்று வேலை செய்வதில் தான் அலாதி பிரியம்.

அந்த கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அவர் இயக்கும் முதல் படத்தின் அறிவிப்பு வெளியானது. அதை அடுத்து படத்தின் ஹீரோ யார் என்பதில் பெரும் சஸ்பென்ஸ் நீடித்தது.

அதை உடைக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை லைக்கா சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது எதிர்பார்த்ததுதான் என்றாலும் மோஷன் போஸ்டர் கலக்கலாக இருந்த நிலையில் தற்போது ஒரு எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது.

சந்தீப் கிஷன் கொடுத்த அப்டேட்

இந்த சூழலில் விஜய் மகனின் முதல் ஹீரோ படம் பற்றிய ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி இது ஜேசன் சஞ்சய்யின் ட்ரீம் ப்ராஜெக்ட். காமெடியும் ஆக்ஷனும் கலந்த படமாக உருவாக இருக்கிறது.

ராயன் படத்தின் ரிலீஸ்க்கு முன்பே நாங்கள் பேசி நடிப்பதை உறுதி செய்து விட்டோம். அதிலும் சஞ்சய் 50 நிமிடங்கள் இடைவேளை இன்றி இந்த கதையை என்னிடம் கூறினார். அந்த ஸ்கிரிப்டுக்காக அவர் எடுத்த முயற்சியை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நிச்சயம் இப்படம் ஃபான் இந்தியா லெவலில் இருக்கும். வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment