விஜய் நடுத்தெருவுக்கு வருவார், சாபமிட்ட மனைவி.. கேட்பார் பேச்சைக் கேட்டு தவறாக போகும் தளபதி.!

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக பார்க்கப்படும் தளபதி விஜய்யை கடந்த சில ஆண்டுகளாகவே புஸ்ஸி ஆனந்த் தான் ஆட்டி படைக்கிறார், அவர் சொல்படி தான் விஜய் நடந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் பேச்சைக் கேட்டுக் கொண்டு தவறான முடிவெடுத்து, ஒரு குடும்பத்தையே நடுரோட்டிற்கு நிறுத்திய விஜய்யை, பாதிக்கப்பட்டவரின் மனைவி சபித்திருக்கிறார். விஜய் சினிமாவில் நடிக்க தொடங்கும் முன்பே அவர் வீட்டில் சிறுவயதிலிருந்து வேலை செய்து வந்தவர் ஏசி குமார். ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் அவர் வீட்டிலேயே தங்கி விட்டார்.

அந்த அளவிற்கு முக்கியமான ஆள். மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கு உதவியவர். எஸ் ஏசியும் ஏசி குமாரும் சேர்ந்து தான் தவறுகள் செய்கிறார்கள் என்று விஜய்யிடம் புஸ்ஸி ஆனந்த் போட்டு கொடுத்து விட்டார். உடனே விஜய் ஏசி குமார் குடும்பத்தை தனது வீட்டில் இருந்து வெளியே துரத்தி விட்டார். எது உண்மை என்று தெரியாமல்.

இதனால் வெளியில் நடுத்தெருவுக்கு வந்த ஏசி குமார் குடும்பம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் பொழுது, அவரது மனைவி விஜய்யும் கூடிய விரைவில் நடுத்தெருவுக்கு வருவார் அசிங்கப்படுவார். கேட்பார் பேச்சைக் கேட்டு விஜய் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார். கண்டிப்பாக அவர் நல்லா இருக்க மாட்டார் என சாபம் கொடுத்துள்ளார் ஏசி குமார் மனைவி.

இந்த பிரச்சனைக்கு எல்லாம் மூல காரணம் புஸ்ஸி ஆனந்த் தான். புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தீவிரமான ரசிகராம். இவர் முதலில் புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற கௌரவ தலைவராக இருந்து வந்தார். அதன் பின் எம்எல்ஏ ஆன புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் மன்ற தலைவராக நீடித்து வந்தார். பிறகு விஜய்க்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கை கூறியதாகவும் மாறினார். இதைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த்க்கு அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் பதவியையும் விஜய் தந்தார்.

அதன் பிறகு முழுவதுமாக விஜய் மக்கள் இயக்கப் பணிகளை தற்போது வரை அவர்தான் கவனித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் நினைத்தபோது, மகனுக்கும் தந்தைக்கும் இடையே புஸ்ஸி ஆனந்த் விரிசலை ஏற்படுத்தி, தற்போது இருவரையும் பிரித்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →