ரிலீசுக்கு முன்பே கொட்டும் பண மழை.. பல கோடிகளில் பிசினஸ் ஆன சூர்யா 42

சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3D அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்டு வரும் சூர்யா 42 தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் ஹீரோயின் திஷா பதானி நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றதை தொடர்ந்து படக்குழு கோவாவிலும் ஷூட்டிங் நடத்தியது. அதன் பிறகு சில நாட்கள் மீண்டும் சென்னையில் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படி பரபரப்புடன் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் அவர்களை குஷிப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ஹிந்தி உரிமை பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்குவதில் பல நிறுவனங்களுக்கும் போட்டி இருக்கும். அந்த வகையில் சூர்யா 42 படத்தின் ஹிந்தி சேட்டிலைட், டிஜிட்டல், தியேட்டர் உரிமம் ஆகியவற்றை பெண் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

அதிலும் அந்த நிறுவனம் சூர்யாவுக்காக 100 கோடி ரூபாயை வாரி இறைத்து இந்த உரிமையை பெற்றுள்ளது. இந்த விஷயம் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தற்போது சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் சூப்பர் ஹிட் ஆன அந்த திரைப்படத்திற்கு பல தேசிய விருதுகள் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் மூலம் சூர்யா ஹிந்தி திரை உலகில் கால் பதிக்கிறார். அதன் காரணமாகவே அவருடைய படத்தின் ஹிந்தி உரிமம் இத்தனை கோடிக்கு விலை போய் உள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் இதன் மூலம் சூர்யாவுக்கு பாலிவுட்டில் இனிமேல் மவுசு உயரும் என்று அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

இப்போது கோலிவுட்டில் படு பிஸியாக இருக்கும் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதை தொடர்ந்து முன்னனி இயக்குனர்களின் திரைப்படத்திலும் இவர் நடிக்க இருக்கிறார். அதற்கான அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →