10 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் சூர்யா-42.. இன்னும் பல சுவாரஸ்யமான அப்டேட் கொடுத்த இயக்குனர்

நடிகர் சூர்யாவுக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே கோலிவுட்டில் ஏறுமுகம் தான். அதிலும் இவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு இவரது மார்க்கெட் எகிறி விட்டது. இந்த நிலையில் சூர்யாவின் அஸ்தானை இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கும் சூர்யாவின் 42-வது படத்தைக் குறித்து பல சுவாரசியமான தகவலை தெரிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

சூர்யா 42 திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் க்ரியேஷன் நிறுவனமும் இணைந்து மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிப்பதாக கூறப்படுகிறது.

இவர்களுடன் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடிக்கும் இந்த படம் 3டி முறையில் உருவாகும் சரித்திர திரைப்படம் ஆகும். இசையமைப்பாளராக ஸ்ரீதேவி பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். சூர்யா நடிக்கும் இப்படத்தில் வெற்றி பழனிச்சாமி கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

படத்தொகுப்பாளராக நிஷாந்த் யூசுப்ம் பணி புரிந்துள்ளனர். மதன் கார்க்கி வசனம் எழுத உள்ளார்.  மேலும் இப்படம் 10 மொழிகளில் தயாராக உள்ளது. அத்துடன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதில் சூர்யா மட்டும் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என 5 கதாபாத்திரங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பதை, இப்போது வெளியாகி இருக்கும் மோஷன் போஸ்டரில் காட்டியுள்ளனர் மேலும் இது பேண்டசி கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் படம் 1000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையும் தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் நடக்கும் கதைகளையும் கொண்டு அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்

suriya-42-cinemapettai
suriya-42-cinemapettai
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →