போதைக்கு அடிமையாகி மார்க்கெட்டை இழந்த சூர்யா பட வில்லன்.. புட்டு புட்டு வைத்த பயில்வான்

சினிமாவில் சிலருக்கு நல்ல எதிர்காலம் இருந்தும் அவர்களது கெட்ட பழக்கத்தினால் மார்க்கெட்டை இழந்துள்ளனர். அவ்வாறு ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு நடிகர் போதைப் பொருளுக்கு அடிமையாகி தனது பட வாய்ப்பை இழந்ததாக பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

அந்த நடிகர் ஹீரோவாக நடிக்கும் படங்களிலேயே வில்லனுக்கு உண்டான கதை அம்சங்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு வில்லன் அவதாரம் எடுத்தார். நடிகர் சூர்யாவின் படத்தில் கொடூர வில்லனாக நடித்து அசத்து இருந்தார்.

அதாவது பயில்வான் ரங்கநாதன் திருட்டுப் பயலே படத்தில் நடித்த ஜீவனை பற்றி தான் பேசி உள்ளார். ஜீவன் பிறக்கும்போதே மிகுந்த பணக்கார குடும்பத்தின் வாரிசாக பிறந்துள்ளார். சினிமாவில் நடித்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் ஜீவனுக்கு இல்லை.

எனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதால் சினிமாவில் நுழைந்தார். நான் அவன் இல்லை என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தில் அவருக்கு வில்லனாக மிரட்டி இருந்தார்.

இவருடைய கேரியர் போவதற்கு இரண்டு முக்கிய காரணத்தை பயில்வான் கூறியுள்ளார். அதாவது ஜீவன் நடிப்பதற்காக எந்த சிரமமான வேலையையும் செய்ய மாட்டார். பாடி லாங்குவேஜ், முகப்பாவனை ஆகியவை ஜீவனுக்கு வராது. மேலும் வெளிநாட்டு மதுபானங்களை அதிகம் அருந்துவார்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஜீவன் ஒரு படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படமும் வியாபாரம் ஆகாமல் கிட்டதட்ட 20 கோடி நஷ்டம் ஆகி உள்ளது. அடுத்தடுத்து தொடர் சருக்களால் ஜீவனால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டதாக பயில்வான் கூறியிருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →