நேரடியாகவும், மறைமுகமாகவும் தூது விட்ட சூர்யா.. மறக்க முடியாமல் பழைய பகையால் தலைக்கேறிய ஈகோ

மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த அமீர் ஒரு காலகட்டத்திற்கு பின் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தி கொண்டார். இவருக்கு நடிப்பும் கை கொடுத்தது,வடசென்னை, யோகி போன்ற படங்களில் இவர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் இவர் ஏற்று நடித்திருந்தார் ராஜன் கதாபாத்திரம் இவரை ஒரு நடிகராக வேறு இடத்திற்கு கொண்டு சென்றது. வெற்றிமாறன் மற்றும் அமீர் இருவரும் நெருங்கிய நண்பர்கள், வாடிவாசல் படத்தில் அமீருக்கு, வெற்றிமாறன் ஒரு கதாபாத்திரம் வைத்திருந்தார்.

கிட்டத்தட்ட 200 சதவீதம் அந்த கதாபாத்திரம் அமீர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என வெற்றி மாறன் மனதில் ஒரு எண்ணமும் இருந்தது. ஆனால் சூர்யா குடும்பத்திற்கு இயக்குனர் அமீர் மீது சில மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.

அமீர் மௌனம் பேசியதே, பருத்திவீரன் போன்ற படங்களால் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தியை நடிகராக வேறு இடத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் அந்த உரிமைகளை தொடர்ந்து பயன்படுத்தியதாலும், அவர் இயக்கிய சில படங்கள் தோல்வியடைந்ததாலும் இவர்களுக்குள் பிரச்சனை வந்தது.

அதிலிருந்து சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அமீர் சவகாசம் வேண்டாம் என ஒதுங்கி விட்டனர். இருந்தாலும் சூர்யா வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன், அமீருக்கு இடம் கொடுத்திருந்தார். இதனால் சூர்யா அவர் வேண்டாம் என நேரடியாகவும், மறைமுகமாகவும் வெற்றியிடம் சொல்லிப் பார்த்தார்.

சூர்யா சொல்லுவதை கொஞ்சம் கூட வெற்றிமாறன் கேட்கவில்லை. அது மட்டும் இன்றி படத்தை ஆரம்பிக்காமல் ஜவ்வாக இழுத்துக் கொண்டு போனார் வெற்றி. இதனால் சூர்யா இந்த ப்ராஜெக்ட் வேண்டாம் என வெளிப்படையாக கூறி டிராப் செய்துவிட்டார்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →