வாடகைத்தாய் தடைச்சட்டம், சிக்குவாரா நயன்-விக்கி ஜோடி? தெளிவான விளக்கம் அளித்த சட்ட வல்லுநர்

கடந்த ஜூன் 9-ம் தேதி நயன்-விக்கி இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி அன்று இரு ஆண் குழந்தைக்கு அம்மா ஆகி விட்டார் நயன்தாரா என்கின்ற செய்தியை கணவர் விக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரபலங்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதை அடுத்து 2022 ஜூன் மாதம் அமலுக்கு வந்த வாடகைத்தாய் தடைசட்டம் நயன்தாரா மீது பாயும் என பல விவாதங்கள் எழுந்தன. இதுகுறித்து சட்ட நிபுணர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம் ரமேஷ் தெளிவான விளக்கம் அளித்திருக்கிறார்.

வாடகைத்தாய் விவகாரத்தில் ஜனவரி மாதத்திலேயே நயன்தாரா பதிவு செய்திருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தை 10 மாதம் என்று வைத்துக்கொண்டாலும், அக்டோபரில் பிறந்த குழந்தைக்கு ஜனவரியிலேயே நயன்தாரா பதிவு செய்திருப்பார்.

ஆனால் வாடகைத்தாய் தடைசட்டம் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. சிலருக்கு கேள்வி என்னவென்றால் ஜனவரி 25ஆம் தேதி அன்று இந்த சட்டத்திற்கான அறிவிப்பு வந்துவிட்டதால், அதன் மூலம் நயன்தாரா பிரச்சினையில் சிக்குவார் என்று நினைக்கின்றனர்.

பொதுவாக சட்டம் வரப்போகிறது என்கின்ற அறிவிப்பு மட்டும் சட்டம் அல்ல. அந்த சட்டம் எப்போது நடைமுறைக்கு வருகிறதோ அப்போதுதான், அதற்குப் பின் செய்யும் தவறான நடைமுறைதான் சிக்கலில் ஆழ்த்தும். ஆகையால் சட்டம் வந்தது ஜனவரி 25 என்றாலும் அதன் விதிகள் வந்தது ஜூன் 2022-க்குப் பிறகு தான்.

ஆகையால் வாடகைத்தாய் மூலம் குழந்தையைப்பெற்றெடுத்தால் எந்த விதியும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியை கட்டுப்படுத்தாது. அவர்கள் ஜாலியாக தங்களுடைய 2 ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம். மற்றவர்களும் இனி இந்த விவகாரத்தை தவிர்த்து விடலாம் என்றும் வாடகைத்தாய் தடைச்சட்டம் குறித்து வழக்கறிஞர் தெளிவான விளக்கமளித்துள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →