சூர்யாவின் படம் உலகம் முழுவதும் பேசும்.. ரிலீசாவதற்கு முன்பே இவ்வளவு பில்டப்பா

தமிழ் சினிமாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் ரசிகர்களும், திரை விமர்சகர்களும் மிகப்பெரிய கவலையில் உள்ளனர். ஏனென்றால் இந்த வருடம் தமிழில் வெளியான பல திரைப்படங்கள் இன்றுவரை வெற்றி அடையாமல் உள்ளது.

தன்னுடைய நேர்த்தியான நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த நடிகர் சூர்யா, சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  தற்போது இயக்குனர் பாலா, வெங்கட்பிரபு உள்ளிட்டோரின் திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் வாடிவாசல் திரைப்படத்திற்காக மும்முரமாக ஜல்லிக்கட்டு பயிற்சி செய்து வருகிறார் சூர்யா. இதனிடையே சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம்  உலகத்தரத்தில் பிரம்மாண்டமாக இருக்கும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான பாகுபலி, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே கட்டாயம் வாடிவாசல் திரைப்படமும் வசூல்ரீதியாகவும் விமர்சனங்கள்ரீதியாகவும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழ் புத்தாண்டன்று நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளபக்கத்தில் டி ஷர்ட் அணிந்து மாட்டை தன் கையில் பிடித்துக்கொண்டு ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனிடையே தற்போது நடிகர் சூரியின் விடுதலை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் இத்திரைப்படத்திற்கு பின் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பினை முழுமையாக தொடங்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் மீனவர்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் திரைப்படத்தில் நடிகையும் தனது மனைவியுமான ஜோதிகா சூர்யா ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் சூர்யா வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கும் ஹிந்தி,ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் ராக்கிட்டரி நம்பி விளைவு திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் மாதவன், சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனிடையே இத்திரைப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →