சூர்யா இரங்களின் பின்னணி.. மற்ற 2 பேர் உயிர் இல்லையா

Surya : சினிமாவில் பல வருடங்களாக தனது திறமையாலும், கடின உழைப்பாலும், பல ரசிகர்களையும் நற்பெயரையும் சம்பாதித்து வைத்திருப்பவர் சூர்யா. அகரம் பவுண்டேஷன் மூலம் இன்றளவும் பல ஏழை மாணவர்களை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

நாட்டை உழுக்கிய சம்பவங்கள்..

சிவகங்கை திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் நகை திருட்டு வழக்கில் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் மர்மமான முறையில் இருந்தது தமிழ்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த துக்க சம்பவத்தை விசாரிக்க விஜய் நேரில் சென்று அஜித் குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

திருப்பூரை சேர்ந்த 27 வயது ரிதன்யா என்ற பின் 78 நாட்களில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சில நடிகர்கள் தங்களது வலைதள பக்கங்களில் ஆறுதல் கூறும் வகையில் பதிவிட்டு வந்தனர்.

சரோஜாதேவியின் மரணம்..

தென்னிந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி. இவர் தற்போது மரணம் அடைந்தது தமிழ் சினிமாவை கண் கலங்க வைத்துள்ளது. தன் கண்களாலேயே அத்தனை நடிப்பையும் வெளிப்படுத்தி விடுவார் சரோஜா. எம்ஜிஆர், சிவாஜி, ராஜ்கபூர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு சினிமாவில் வலம் வந்தவர் சரோஜாதேவி.

இவரது மறைவு சினிமாவுக்கு மட்டுமல்ல பலரது ரசிகர்களுக்கும் ஒரு பெரும் சோகம் தான். ஆவி மறைந்தாலும் உடல் மறைய கூடாது என்ற சொல்லிற்கு ஏற்ப தற்போது சரோஜாதேவியின் கண்கள் தானம் செய்யப்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு நிறைய நடிகர்கள் ஆறுதல் தெரிவிக்கும் வகையில் தனது வலைப்பக்கங்களில் இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.

சூர்யாவின் திடீர் பதிவு..

சரோஜாதேவி அவர்களின் இறப்பு வருத்தம் அளிக்கிறது. அவர் எப்போதும் என் மீதும் மற்றும் என் குடும்பத்தின் மீது அன்பாக இருப்பார். மனதளவில் அவர் ஒரு குழந்தை, நாங்கள் அவளுடன் பணியாற்றிய ஆதவன் திரைப்படம் மறவாத ஒன்று“. என்று நடிகை சரோஜா தேவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் சூர்யா. இதற்கு முதலில் நடந்த அஜித் குமார் மற்றும் ரிதன்யா மரணத்தை பற்றி ஏன் சூர்யா கேட்கவில்லை.அவர்கள் இருவரும் உயிர் இல்லையா? என்று இணையவாசிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →