விஜய்க்கு போட்டியாக வசூல் மன்னனாக களமிறங்கும் சூர்யா.. லியோ படத்தை விட அதிக லாபத்தை பார்த்த ரோலக்ஸ்

கடந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்து திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர்களை ரோலக்ஸ் என்று புலம்ப வைத்தார். அதே அளவுக்கு இந்த வருடமும் வெற்றி படத்தை கொடுத்தாக வேண்டும். அதிலும் மிகப்பெரிய லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக மிக மும்பரமாக வேலை பார்த்து வருகிறார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தனது42 படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இப்படம் ஒரு வரலாற்று மிகுந்த படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திசா பதானி நடித்து வருகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

அத்துடன் இந்த படம் விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு போட்டியாகவே உருவாக்கப்பட்டு வருகிறதாம். மேலும் விஜய் படம் 400 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. ஆனால் சூர்யாவின் 42வது படம் 500 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. இதற்கு அடுத்ததாக லியோ படத்திற்கு லோகேஷ் கனகராஜ் அவரது ஸ்டைலில் எப்படி ஒரு ப்ரோமோவை வெளியிட்டாரோ அதே மாதிரி சூர்யா 42 க்கும், சிறுத்தை சிவா ஒரு ப்ரோமோவை ஏப்ரல் 14 வெளியிட இருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அனைத்து ஏற்பாடுகளுக்கும் பின்னணியில் இருப்பது சூர்யா தான். ஏனென்றால் விஜய்க்கு போட்டியாக இந்தப் படத்தை ரிலீஸ் செய்து அவரை விட எப்படியாவது வசூலில் வென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் முழு வேலையும் பார்த்து வருகிறார்.

ஆனால் இவர் விஜய்யோட போட்டி போட வருகிறார் என்பதை விட லோகேஷ் படத்திற்கு போட்டி போட நினைக்கிறார். அது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. ஏனென்றால் தற்போது லோகேஷ் படம் என்றால் எப்படி இருக்கும் என்று அனைவரும் அறிந்ததே. இப்படி இருக்கையில் எந்தத் துணிச்சலுடன் இவர் இந்த மாதிரியான விஷயங்களை இறங்கி இருக்கிறார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனால் அப்படி மட்டும் ஒரு விஷயம் அதாவது லியோ படத்தை விட இவரது படம் பெரிய அளவில் வசூல் சாதனை முறியடித்தது என்றால் கண்டிப்பாக சூர்யாவின் வளர்ச்சி வேறு விதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை 10 மொழிகளிலும் மற்றும் 3டியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையப் போகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →