படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி பேக்கப் சொன்ன சூர்யா.. இயக்குனருடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதம்

தற்போது முரட்டு இயக்குனர் கூட்டணியில் சூர்யா தனது 41 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சூர்யா நிறைய கண்டிஷன் போட்டுள்ளார். அதாவது படத்தில் என்னை அழகாக தான் காட்ட வேண்டும், நிறைய நாள் கால்சீட் எடுத்துக்க கூடாது போன்ற விஷயங்களை முன்கூட்டியே சூர்யா பாலாவிடம் பேசியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் சூர்யா மீனவனாக நடிக்கிறார். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு கிட்டத்தட்ட 34 நாட்கள் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராக இருந்தது.

இந்நிலையில் படப்பிடிப்பில் சூர்யா, பாலா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு படப்பிடிப்பிலிருந்து சூர்யா பேக்கப் சொல்லிவிட்டு கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தற்போது சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனால் பாலா இயக்கும் படத்தை சூர்யா விரைந்து முடிக்க சொன்னதால் இவர்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றி போய் உடனே சூர்யா படப்பிடிப்பில் இருந்து கிளம்பி விட்டார் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் மறுபக்கம் படப்பிடிப்பில் பாலா கடுமையாக நடந்து கொண்டதால்தான் சூர்யா அங்கிருந்து சென்றார் எனவும் கூறப்படுகிறது. என்னதான் இருந்தாலும் சூர்யாவுக்கு ஆரம்பத்தில் பிதாமகன், நந்தா போன்ற படங்களைத் தந்த இயக்குனரிடம் இப்படி நடந்து கொள்வது தவறு என பலரும் கூறுகிறார்கள்.

ஆனால் சூர்யா சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கை தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிப்பதால் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட செல்வதற்காக தான் திடீரென மும்பை சென்றார் எனவும் கூறப்படுகிறது. மேலும் படக்குழு தரப்பில் இருந்து தெளிவான விளக்கம் வந்தாலே உண்மை என்ன என்பது தெரியவரும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →