தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட்.. கூலியின் வெற்றி கேள்விக்குறி

கூலி” என்ற படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14, 2025 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஐமாக்ஸ், டி-பாக்ஸ், 4டிஎக்ஸ் போன்ற பல்வேறு வடிவங்களிலும் திரையிடப்படும். அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார்.

கூலியின் வெற்றி கேள்விக்குறி

சிங்கப்பூரில் கேதாய் சினிப்ளெக்ஸின் மூடல் காரணமாக பெரிய அளவிலான திரையரங்குகள் இழப்பு ஏற்படலாம். இது “கூலி” படத்தின் திரையரங்க உரிமைகள் மதிப்பை பாதிக்கும். ₹4.5 கோடி மதிப்பு ₹4 கோடியாக குறையலாம்.

ரஜினிகாந்தின் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தும் இந்த சூழ்நிலை பாதிப்பை ஏற்படுத்தும். சிங்கப்பூரில் விஜய், அஜித் படங்களுக்கு சீன மக்கள் ஆதரவு உள்ளது. இந்த பாதிப்பு படத்தின் வருவாயை குறைக்கலாம்.

50 திரையரங்குகள் மூடல் காரணமாக 170 திரையரங்குகளுக்கு மேல் படம் திரையிட முடியாமல் போகலாம். இது வினியோகஸ்தர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். படத்தின் வெற்றிக்கு பெரிய சவால் ஏற்படும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரபலமும் ரசிகர் ஆதரவும் மிக பெரிய சக்தி. சிங்கப்பூரில் சினிமா வெளியீடு சிக்கலானாலும், மற்ற நாடுகளில் வெளியீடு கொடிக்கட்டி பறக்கும் எனும் நம்பிக்கை உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →