துணிவிற்கு தன் வாயாலே விளம்பரம் செய்த தளபதி.. சத்தமில்லாமல் சந்தோசப்பட்டு வரும் அஜித்

தென்னிந்திய சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தல, தளபதி என்று தனி தனி ரசிகர்கள் பட்டாளம் விஜய்க்கும்,அஜித்திற்கு உருவாகியுள்ளது. இதனால் இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தால் போதும் ரசிகர்கள் அஜித் பெருசா, விஜய் பெருசா என தங்களது வழக்கமான சண்டையை ஆரம்பித்து விடுவார்கள். இப்படியே பல காலங்கள் ரசிகர்களின் சண்டையை கவனித்த நடிகர்களும், மேலும் அவர்களை தூண்டும் வகையில் சில வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

உதாரணமாக அஜித் பட டயலாக்குகளில் விஜயை கலாய்ப்பது, விஜய் பட டயலாக்குகளில் அஜித்தை மறைமுகமாக பேசுவது என சில காட்சிகளையும், வசனங்களையும் இயக்குனர்கள் எடுத்து ரசிகர்களை கொந்தளிக்க செய்வார்கள். அஜித்தாவது படங்களில் வசனங்களை பேசுவதோடு நிறுத்தி விடுவார். ஆனால் நடிகர் விஜய் மைக் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் தன்னை தானே புகழ்ந்தும், அஜித்தை மறைமுகமாக தாக்கியும் பேசி விடுவார்.

அண்மையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற வாரிசு பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் மேடையில் பேசிய விஜய், தனக்கு எதிரி நான் தான் என அஜித்தை ஒரு போட்டியாளராக கூடத் தான் பார்க்கவில்லை என்பதை மறைமுகமாக அஜித்தை,விஜய் தாக்கி பேசினார். சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், இது குறித்து அஜித்தின் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலடியும் வராமல் உள்ளது.

இதன் காரணமாக சத்தமே இல்லாமல் அஜித், நடிகர் விஜயை தனது அமைதியால் அவமானப்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக உள்ளதால் விஜய் என்ன பேசினாலும் அவர்களுக்கு குதூகலம் தான்.

ஆனால் நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்து பல ஆண்டுகளாகி வரும் நிலையிலும், ஒருமுறை கூட மேடையில் ஏறி ரசிகர்களிடம் தனது படம் குறித்தும், தன்னை பற்றியும் பேசாமல் உள்ளார். மேலும் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்துக்கொள்ளாத போதும் இவருக்காக கோடான கோடி ரசிகர்கள் அவரது மௌனத்தை ஏற்று அவரை பின்பற்றுகின்றனர். இதிலிருந்தே விஜய்க்கு தமிழகத்தில் அவரது ரசிகர்களை தவிர்த்து மவுசு குறைவு என தெரிகிறது.

எவ்வளவு தான் விஜய் ,அஜித்தை மதிக்காமல் பேசி வந்தாலும் அஜித் ஒருபோதும் விஜயை குறைவாக எண்ணியதில்லை. இதனை விஜய் ரசிகர்களுக்கு விஜயே பாடமாக சொல்லும் வகையில் விஜயின் சமீபத்திய மேடை பேச்சு அரங்கேறியுள்ளது. எது எப்படியோ தல தான் என்றும் மாஸ் என்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →