தனுஷை வைத்து விளையாடும் தாணு.. பொன்னியின் செல்வன் அளவுக்கு செய்யணும்னு அவசியம் இல்ல

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் உருவாகியுள்ளது இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் போன்ற வெற்றி படங்களை தாணு வெளியிட்டதால் நானே வருவேன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் பல வருடங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதற்கும் பல பிரபலங்கள் முயற்சி செய்தனர். ஆனால் கடைசியில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் படத்தை பெரிய அளவில் புரமோஷன் செய்யாமல் ஆனால் முக்கியமான இடங்களுக்கு மட்டும் சென்று ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தாலும் படத்தை பெரிய அளவில் புரமோஷன் செய்யவில்லை என தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதாவது திருச்சிற்றம்பலம் என்ற வெற்றி படத்தை கொடுத்த தனுசுக்கு நானே வருவேன் திரைப்படத்தையும் ப்ரோமோஷன் செய்தால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என கூறி வருகின்றனர்.

ஆனால் கலைப்புலி எஸ் தாணு படத்தை நான் புரமோஷன் செய்யாமலேயே நானே வருவேன் படத்தை வெற்றியடைய செய்வேன் என கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ப்ரோமோஷன் செய்யமாட்டேன் என்று சொல்லுவதே ஒருவகையான புரோமோஷன் தான் அதாவது நான் மற்றவர்களை போல புரமோஷன் செய்ய மாட்டேன்.

ஆனால் படத்தை வெற்றியடைய செய்வேன் எனக் கூறினால் புரோமோஷன் செய்யாமலேயே படம் வெற்றி ஆகுமா அப்படி நானே வருவேன் படத்தில் என்னதான் இருக்கிறது என பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக செல்வார்கள். மேலும் நானே வருவேன் திரைப்படத்திற்கான 5 புரோமோ வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் ப்ரோமோஷன் செய்யமாட்டேன் தாணு கூறியுள்ளார் தற்போது எதற்காக புரோமோ வீடியோக்களை வெளியிட வேண்டும் அதுவும் நானே வருவேன் படத்திற்காக பேட்டி கொடுக்கிறீர்கள் அதில் புரோமோஷன் செய்யமாட்டேன் என சொல்வது எந்த விதத்தில் நியாயம் பேட்டி கொடுக்காமல் இருந்தால் தானே புரோமோஷன் பேட்டி கொடுத்துவிட்டு பேட்டியிலேயே புரமோஷன் செய்யமாட்டேன் என்று சொல்லுவது கேளிக்கையாக இருக்கிறது என கூறியுள்ளனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →