அட பப்ளிசிட்டி பைத்தியமே.. ஆடை இல்லாமல் வந்து ஆஸ்கார் மேடையை களங்கப்படுத்திய நடிகர்

Oscar Award: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் 96 ஆவது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. அந்த விருதுக்கான போட்டியில் பல படங்கள் பங்கேற்ற நிலையில் ஆஸ்கரையே சிறிது நேரம் மறக்கச் செய்யும் அளவுக்கு ஒரு சம்பவத்தை நடத்தி இருக்கிறார் பிரபலம் ஒருவர்.

WWF சாம்பியன் மற்றும் ஹாலிவுட் நடிகரான ஜான் சீனா சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை வழங்குவதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது வித்தியாசம் என்ற பெயரில் அவர் ஆடை இல்லாமல் மேடைக்கு வந்தது ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தொகுப்பாளரும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்று விட்டார். உடனே விளக்குகள் அணைக்கப்பட்டு அங்கு இருந்த விழா குழுவினர் பதறிப் போய் வந்து அவருக்கு ஆடையை அணிவித்தனர்.

அதன் பிறகு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை அவர் வழங்கினார். அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்த்த நெட்டிசன்கள் அட பப்ளிசிட்டி பைத்தியமே இதெல்லாம் ஒரு பொழப்பா? என ஜான் சீனாவை காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

இதன் மூலம் அவர் ஆஸ்கார் மேடையை கலங்கப்படுத்தியதாகவும் கருத்துக்கள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் மிக பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் ஜான் சீனா ஸ்கின் கலர் உடை அணிந்து தான் மேடை ஏறினார் என்ற விளக்கமும் கசிந்து உள்ளது.

ஆனாலும் வித்தியாசமாக செய்கிறேன் என்ற பெயரில் இப்படி ஒரு கேவலத்தை அரங்கேற்றி இருக்கும் நடிகரை ரசிகர்கள் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர். இதனால் இந்த 96வது ஆஸ்கர் விருது விழா சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →