சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படும் நடிகை.. 150 படங்கள் நடித்தும் கவுண்டமணி லவ்வர் படும் பாடு

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வந்த நடிகை, இப்பொழுது சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறார். கவுண்டமணி, செந்தில் என அனைவரிடமும் ஜோடி போட்டு கலக்கிய நடிகை இப்பொழுது யூடியூப் சேனலில் உதவுமாறு அனைவரிடமும் கேட்கிறார்.

இவருக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நாக பாபு, மஞ்சு விஷ்ணு உள்ளிட்ட பல பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். எப்போதுமே கழிப்பறையை சுத்தம் செய்யும் நடிகை என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்வார் காமெடி நடிகை வாசுகி.

ஏனென்றால் இவர் வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தில் டிப் டாப் ஆக சேலை கட்டி, தலை நிறைய பூ வைத்து, கையில் குடையைப் பிடித்துக் கொண்டு கருப்பு நிற கண்ணாடியை அணிந்து பள்ளிக்கூடத்திற்கு செல்வார். அவர் ஆசிரியர் என நினைத்து கவுண்டமணியும் அவரை காதலிக்க முயற்சிப்பார்.

ஆனால் பள்ளிக்கூடத்திற்கு சென்றவுடன் உடைய மாற்றி, அங்குள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும் காட்சியில் வாசுகி நடித்த பிறகு செம பேமஸ் ஆனார். இவ்வாறு காமெடி நடிகர்களுடன் 80களில் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகை வாசுகி, தற்போது சாப்பிடுவதற்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவருடைய நிலைமையை அறிந்த தெலுங்கு பிரபலங்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நாக பாபு ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் அளித்து அவருக்கு உதவி இருக்கின்றார்கள். அதை தொடர்ந்து மஞ்சு விஷ்ணுவும் நடிகை வாசுகிக்கு உதவ முன்வந்துள்ளார். இவர் மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் தலைவராக இருப்பதால், தனது சொந்த செலவில் மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் கார்டு வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதன் மூலம் அவருக்கு பண உதவி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். இவ்வாறு தெலுங்கு பிரபலங்கள் தமிழ் நடிகை வாசுகிக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர். ஆனால் பணம் இன்றி சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்து வரும் இவரை கோலிவுட் பிரபலங்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் தமிழ் சினிமா பிரபலங்களை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →