பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த காரணத்தை போட்டு உடைக்கும் போட்டியாளர்.. ஒண்ணுமே தெரியாத மாதிரி டிராமா போடும் பச்சோந்தி

Pradeep Red Card Reason: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இதுவரை நடந்த சீசன்களிலேயே அதிக வன்மத்தையும், போட்டி, பொறாமையும் கொண்ட சீசனாக 7 இருந்தது. அந்த வகையில் கடந்த வாரம் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகி நிறைவு பெற்று விட்டது. இதனை அடுத்து வெளியே வந்த போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது விஷ்ணு சமூக வலைதளங்களில் ஒவ்வொரு பேட்டியாக கொடுத்து வருகிறார். அப்படி இவர் கொடுத்த ஒரு பேட்டியில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த காரணத்தை போட்டு உடைத்து இருக்கிறார். அதாவது வீட்டுக்குள் இருந்த சமயத்தில் பூர்ணிமா என்னிடம் பிரதீப்பை பற்றி சில விமர்சனங்களை வைத்தார். அவருடைய பார்வையும் பேச்சும் கொஞ்சம் குதர்க்கமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

அதே மாதிரி எல்லா பெண்களும் சேர்ந்து பிரதிப் மீது குற்றம் சுமத்தினார்கள். அவர் இரட்டை அர்த்தத்துடன் பேசுவதாக கூறினார்கள். அது மட்டும் இல்லாமல் வீட்டை சுற்றி 70 கேமராக்கள், கமல் சார் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தேவை இல்லாமல் இந்த விஷயத்தில் பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று அவர்களை முழுவதுமாக நான் நம்பிட்டேன்.

அதனால் தான் பிரதிப்புக்கு எதிராக போர் கொடியை தூக்கி அவருக்கு ரெட் கார்டு கொடுத்தேன். மற்றபடி அவர் பற்றிய எந்தவித தவறான கருத்தும் என்னிடம் இல்லை. அதுவும் அவருக்கு ஒரு வார்னிங் தான் கொடுப்பாங்க என்று நான் நினைத்தேன். கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்காத விஷயமாக அவர் வெளியே போனது தான். அது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு புரிந்து விட்டது.

அதனால் தான் வெளியே வந்த பிறகு உடனே பிரதீப்பை பார்த்து பேசி என்னுடைய விளக்கத்தை அளித்து விட்டேன் என்று விஷ்ணு கூறியிருக்கிறார். இவர் என்னதான் கூறினாலும் இவர் கிட்டத்தட்ட பிக் பாஸ் வீட்டுக்குள் நூறு நாட்கள் இருந்ததை வச்சு பார்க்கும் பொழுது இவரைப் போல் ஒரு பச்சோந்தியாக நம் வேறு யாரையும் பார்த்ததே கிடையாது. அந்த அளவிற்கு நேரத்துக்கு நேரம் குணத்தை மாற்றிக்கொண்டு நடிக்கக் கூடியவர்.

அப்படிப்பட்டவர் வெளியே வந்த பிறகு இவர் மீது கெட்ட இமேஜ் வந்திரக்கூடாது என்பதற்காக எனக்கும் பிரதீப் ரெட் காடு விஷயத்துக்கும் எந்த சம்பந்தமே இல்லை என்று ஒன்றுமே தெரியாத பாப்பாவாக நடிக்கும் இந்த டிராமா-வை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →