விக்ரம் பிரபு பட மாமியாருக்கு நடந்த கொடுமை.. கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்த 3 இளைஞர்கள்

மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வாரிசு நடிகராக சினிமாவிற்குள் வந்த விக்ரம் பிரபு சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கும்கி திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கொடுத்தாலும் அதை தொடர்ந்து வெளிவந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றி படங்களாக அமையவில்லை.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இவன் வேற மாதிரி. ஆக்சன் திரில்லர் பாணியில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு மாமியாராக அதாவது ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்தவர் தான் ஷர்மிளா. இவர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் இவருக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது இவர் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக மூன்று இளைஞர்கள் இருந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் அவர்கள் ஷர்மிளாவை பார்த்து அக்கா என்று கூறி இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு சம்மதித்து அவரும் இரண்டு நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் மூன்றாவது நாளிலேயே அந்த மூவரும் அவரிடம் வந்து எங்களில் ஒருவரை நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று நேருக்கு நேராக கேட்டிருக்கிறார்கள். இதனால் அதிர்ந்து போன அவர் இன்னும் கொஞ்ச நாள் போனால் என் பையனே உங்கள் அளவுக்கு வளர்ந்து விடுவான். அப்படி இருக்கும்போது நீங்கள் என்னை அம்மாவாக தான் பார்க்க வேண்டும்.

இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார். ஆனாலும் கேட்காத அந்த மூவரும் எங்களை அட்ஜஸ்ட் செய்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்து இருக்கின்றனர். 40 வயதை கடந்த ஷர்மிளா அந்த திரைப்படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்க வந்திருக்கிறார்.

ஆனால் வயது வித்தியாசம் பார்க்காமல் 24, 25 வயதே ஆன அந்த மூன்று பேரும் இவரை இப்படி கட்டாயப்படுத்தியதால் அதிர்ந்து போன அவர் அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது இந்த விஷயத்தை அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அம்மா வயது நடிகையிடம் இளைஞர்கள் இப்படி அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட விஷயம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →