துணிச்சலாக ஜிவி பிரகாஷ் எடுத்த முடிவு.. இவரைப் பார்த்து கத்துக்கோங்க பாஸ்

இசையமைப்பாளராக தன் திரைப் பயணத்தை ஆரம்பித்து தற்போது நடிகராக கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ். தற்போது பல பெரிய நடிகர்களுக்கும் முன்னோடியாக சில விஷயங்களை செய்து வருகிறார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

ஜிவி பிரகாஷ் தொடர்ந்து புது இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். பெரிய நடிகர்களே புது இயக்குனர்கள் படத்தில் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் ஜிவி பிரகாஷ் புது இயக்குனர்களிடம் நண்பர் போல பழகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பலரும் பாராட்டும் விதமாக ஒரு செயலை செய்துள்ளார் ஜிவி பிரகாஷ். அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூன் 13-ஆம் தேதி ஜிவி பிரகாஷின் பிறந்த நாள் வந்தது. அன்று ஜிவி பிரகாஷ் ஒரு முக்கியமான முடிவு எடுத்துள்ளார்.

அதாவது எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிப்பது இல்லை என்று ஒரு சபதம் எடுத்துள்ளாராம். இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் பாலிவுட் நடிகர்கள் அதிகம் கவனம் செலுத்தி இந்த ரம்மி விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ், தான் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுடன் மட்டுமல்லாமல் அனைத்து நடிகர்களையும் இதில் நடிக்காதீர்கள் என்று அறிவுரை கூறி வருகிறாராம். தற்போது ஜிவி பிரகாஷ் பல நடிகர்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறார்.

இவ்வாறு சின்ன வயதிலேயே ஜிவி பிரகாஷின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், உண்மையிலேயே சின்ன தம்பிக்கு நிறைய தைரியம் தான் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. ஜிவி பிரகாஷ் இதுபோன்று தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →