ரஜினியை மனுசனாக மாற்றிய பிரபல பாடகி.. மேடைப்பேச்சில் அசர வைத்த சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ரஜினியின் படங்களை அவரது ஸ்டைலுக்காகவே ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தனர். அப்போது உள்ள காலகட்டத்தில் இளைஞர்களின் விருப்பமான நாயகனாக ரஜினி வளம் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் அப்போது ரஜினிக்கு ஏகப்பட்ட கெட்ட பழக்கங்கள் இருப்பதை அவரை வெளிப்படையாக கூறுகிறார். ஆனால் அவற்றையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு தற்போது ஒரு நல்ல மனிதனாக வாழ்வதற்கான காரணம் யார் என்பதை சமீபத்திய விழா ஒன்றில் ரஜினி பேசி உள்ளார்.

அதாவது ரஜினி இளமை காலங்களில் தண்ணி, சிகரெட், அசைவம் என தனது ஒவ்வொரு நாட்களும் சென்றதாக கூறியிருந்தார். அப்போதெல்லாம் சைவத்தை பார்த்தாலே சுத்தமாக பிடிக்காது என்றும் ஆடு, மாடு சாப்பிடுவது எல்லாம் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று யோசித்ததுண்டு.

காலையிலேயே அப்போது ஆப்பம், பாயா தான் சாப்பிடுவேன். தினமும் மூன்று வேலைகளில் இரண்டு வேளை அசைவம் தான் சாப்பிடுவேன். மேலும் சிகரெட் எண்ணற்ற பாக்கெட்டுகள் செல்லும். இதில் தண்ணி வேற, இப்படி கெட்ட பழக்கங்கள் உள்ளவர்கள் 60 வயதிற்கு மேல் வாழ்வது கடினம் தான்.

ஆனால் இப்போது தனக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதிலும் தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த் தான் என கூறியுள்ளார். லதா ரஜினிகாந்த் சினிமாவில் சில பாடல்கள் பாடி உள்ளார். அதிலும் பெரும்பாலும் அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி, கோட்சடையான் போன்ற ரஜினியின் படங்களில் இவர் பாடி உள்ளார்.
ரஜினி மற்றும் லதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

ரஜினி பேசுகையில் இப்படி கெட்ட பழக்கங்கள் இருந்த என்னை அன்பால் மாற்றியவர் என்னுடைய மனைவி தான். மருத்துவர்களை அழைத்து வந்த எனக்கு ஆலோசனை வழங்கினார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றிக் கொண்டேன். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு முன் நான் எப்படி இருந்தேன் என்பதும் இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும் என ரஜினி தனது கடந்து வந்த காலத்தை பற்றி பேசினார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →