இது விளம்பரம் இல்லை.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித்தின் வெயிட் லாஸ் புகைப்படங்கள்

Update of Vidaa Muyarchi movie with Ajith’s latest photos: அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த படம் எப்பயோ முடிந்து இருக்க வேண்டியது, ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாக இழுத்தடித்து கொண்டிருக்கின்றனர். இப்போது படத்தை சீக்கிரம் முடிக்கும் முனைப்புடன் அஜித் படக்குழுவினருடன் இணைந்து தீவிரமாக செயல்படுகிறார்.

கடந்த சில மாதங்களாகவே அஜர்பைஜான் நாட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்போது அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்ததாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ள புதிய பகுதிக்கு படக்குழு விரைவில் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. லைக்கா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு துபாயில் துவங்கி, தொடர்ந்து அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வபோது சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டானது. இந்த சூழலில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதிய இடத்தில் துவங்கப் போவதாகவும், இப்போது அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அஜித் புகைப்படத்துடன் வெளியான விடாமுயற்சி படத்தின் அப்டேட்

இது தொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சுரேஷ் சந்திரா அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இவர் தான் அஜித்தின் மேனேஜர் என்பதால் அவரைப் பற்றிய  அப்டேட்டை கொடுப்பார். ஆனால் இது விளம்பரம் கிடையாது என்று அவருடைய வெயிட் லாஸ் புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதில் அஜித், படப்பிடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அஜர்பைஜான் நாட்டில் செம ஜாலியாக இருப்பது தெரிகிறது.

அதோடு செம ஸ்லிம்மாக இருக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் லுக் தல ரசிகர்களின் மத்தியில் விடாமுயற்சி படத்தின் மீதான எகிற வைத்துள்ளது. இதில் பில்லா படத்தில் கோட் சூட் உடன் செம கெத்தா போஸ் கொடுக்கிறார். அடுத்ததாக என்னை அறிந்தால் லுக்கில் ஹேண்ட்சம் ஆகவும் இன்னொரு புகைப்படத்தில் இருக்கிறார். மேலும் இரவு நேரத்தில் ரோட்டோரமாய் கேஷுவலா வாக்கிங் செல்லும் அஜித்தின் புகைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது..

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →