சுந்தர்சிக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்.. படம் வேற லெவல் போங்க

திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு அரசியல் த்ரில்லர் படமாக வெளியானது பரமபதம் விளையாட்டு. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் பரமபதம் விளையாட்டு படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக திரிஷாவுக்கு நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்தது.

பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கியவர் திருஞானம். தற்போது இவர் சுந்தர் சியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் நடிக்க உள்ளார். தமிழில் இவர் நடித்த முதல் படத்திலேயே வில்லனாக மிரட்டியிருந்தார்.

அதன்பிறகு இவர் சிறிது காலம் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் தமிழ் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப் என்ற வில்லன் நடித்திருப்பார்.

இப்படத்தில் அதர்வா, நயன்தாரா, ராசி கண்ணா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. இப்படத்தில் ருத்ரவாக நடித்திருந்த அனுராக் காஷ்யாப் தற்போது சுந்தர்சிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.

அனுராக் காஷ்யப் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், நடிகர், எடிட்டர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் ஹிந்தியில் பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சுந்தர் சி பெரும்பாலும் காமெடி படங்களில் நடிக்கக் கூடியவர். ஆனால் மாஸான வில்லன் இப்படத்தில் நடிக்க உள்ளதால் படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது யூகிக்க முடியவில்லை. மேலும் இப்படத்திற்கான வேலைகள் மிக விரைவில் தொடங்கயுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →