சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த ரத்தன் டாட்டா.. மூட்டை முடிச்சோடு காலி பண்ண வைத்த அமிதாப் பச்சன்

Ratan TATA: தொழிலதிபர் ரத்தன் டாட்டா தொடங்கிய எல்லா தொழிலுமே அவருக்கு பெரிய வெற்றியை தான் கொடுத்திருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய வணிக வர்த்தகத்திற்கு காரண கர்த்தாவாக இருந்த இவர், சினிமாவிலும் தன் பங்கு இருக்க வேண்டும் என நினைத்தார்.

அதற்காக ஒரு பாலிவுட் படத்தை, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவாக்கினார். இதுதான் ரத்தன் டாட்டா முதலும் கடைசியுமாக தயாரித்த படமாகி போனது, அந்தப் படத்தை பற்றி பார்க்கலாம்

ரத்தன் டாட்டா தயாரித்த Aetbaar என்ற இந்தி படத்தில் படம், அமிதாப் பச்சன், பிபாஷா பாசு மற்றும் ஜான் அபிரஹாம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . விக்ரம் பட்டின் இயக்கத்தில் உருவான இப்படம், 1996ஆம் ஆண்டில் வெளியான அமெரிக்க திரைப்படமான Fear என்பதிலிருந்து ஈர்க்கப்பட்டது.

வசூல் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி

Aetbaar திரைப்படம் இந்தியாவில் ₹4.25 கோடிகள் மட்டுமே வசூலித்தது, உலகளவில் ₹7.96 கோடிகள் வசூலித்தது. இப்படத்தின் தயாரிப்பு செலவாக ₹9.50 கோடிகள் செலவானதால், இதில் ஏற்பட்ட நெருக்கடி ரத்தன் டாடாவிற்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்தின் தோல்வியால், ரத்தன் டாட்டா திரைப்படத் துறையில் இனிமேல் முதலீடு செய்ய கூடாது என்று முடிவெடுத்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் தயாரிக்கும் படம் என்பதாலும், பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இருந்ததாலும் மக்கள் இதை அதிகமாக எதிர்பார்த்தார்கள். ஆனால் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் சரியாக பூர்த்தி செய்யாததால் தோல்வியை தழுவியது. அத்தோடு ரத்தன் டாட்டா சினிமாவுக்கு கும்பிடு போட்டு விட்டார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment