சிவாஜி வில்லனாக நடித்த ஒரே படம்.. மக்களுக்கு தன் மீது வெறுப்பை உண்டாக்கிய நடிகர் திலகம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் ஹீரோவாக அதிக படங்களில் நடித்தது சிவாஜி தான். மேலும் பல சுதந்திர போராட்ட வீரர்களாக இவர் நடித்துள்ளார். எல்லாம் கதாபாத்திரத்திற்கும் சிவாஜி கணேசன் பொருந்த கூடியவர்.

இந்நிலையில் சிவாஜி பல படங்களில் சில நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி நல்லதுக்காகத்தான் இவ்வாறு செய்தார் என்பது போல காண்பித்து விடுவார்கள். ஆனால் ஒரே ஒரு படத்தில் தான் முழு வில்லனாக சிவாஜி நடித்துள்ளார்.

அதாவது பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் உத்தம புத்திரன். இந்த படத்தில் விக்கிரமன் மற்றும் பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

இதில் விக்கிரமன் என்ற கதாபாத்திரத்தில் தான் சிவாஜி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் பத்மினி, நம்பியார் ஆகியோரும் நடித்திருந்தனர். சிவாஜியின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடி உள்ளது.

மேலும் வில்லன் சிவாஜி இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இறந்து விடுவார். இந்தப் படத்தில் தான் சிவாஜி முழு வில்லத்தனதுடன் நடித்திருப்பார். அதன் பின்பு இவர் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததில்லையாம்.

இதுவரை சிவாஜி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிட்டத்தட்ட 288 படங்களின் நடித்துள்ளார். இதில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த சிவாஜி இந்த ஒரு படத்தினால் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்தாலும் அதன் பின்பு சுதாகரித்துக் கொண்ட நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →