விஜய்க்காக விட்டுக் கொடுத்த ரஜினி.. Never Giveup கொள்கையை காப்பாற்றும் அஜித்

The superstar who gave up for Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்கள் அனைவரும் எங்களுக்குள் போட்டி இல்லை! பொறாமை இல்லை! என்று சொல்லிக் கொண்ட போதும் அவர்களின் படங்கள் ஒன்றுக்கொன்று போட்டியிட தான் செய்கிறது.

இதனால் இந்த தலைவர்களின் ரசிகர்களுக்குள்ளும் “யார் கெத்து?” என்று பலத்த போட்டி நிலவத்தான் செய்கிறது.

இதற்காக அவ்வப்போது தலைவர்களும்  எங்களுக்குள் போட்டி இல்லை என்பது போல் போட்டோ பிடித்து சமாதான முயற்சியில் ஈடுபடுவது உண்டு.

ஒவ்வொரு பண்டிகையின் போதும் தலைவர்களின் படங்கள் மோதிக் கொள்ளும் நிலையில் தற்போது படத்தின் முக்கியமான அறிவிப்புகளும் ஏப்ரல் 14 சித்திரை திருநாளை முன்னிட்டு வெளிவர காத்திருக்கின்றன.

தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் 14 அன்று வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதே தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஞானவேல் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் வேட்டையன் படத்தை அடுத்து, ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தலைவர் 171 காக இணைய உள்ளார்.

விஜய்க்காக தலைவர் 171 அப்டேட்டை மாற்றி வைத்த சூப்பர் ஸ்டார்

தலைவர் 171 படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று ஏப்ரல் 14 அன்று வெளியிடப் போவதாக இருந்தது.

கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடுவது என முந்தி கொண்ட தளபதியினால், தலைவர் இந்த அப்டேட்டை இப்போது வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே லால் சலாம் இசை வெளியீட்டில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு முடிவு கட்டி விஜய்யை பற்றி பேசி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.

அதேபோல் தற்போது இந்த செய்கையினால் “பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்!” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்.

போட்டின்னு வந்துட்டா விட்டுக் கொடுப்பதெல்லாம் வேலைக்காகாது என்பது போல் நெவர் கிவ் அப் என்று வலிமையுடன் போராடுவார் நம்ம தல அஜித்

அவர் ஒரு தரக்க முடிவு பண்ணினா! பண்ணினது தான்! என்பது போல் எப்ப அப்டேட் கொடுக்கணும்னு நினைச்சிருக்கிறாரோ அப்போ அவரது அப்டேட் கண்டிப்பா ரசிகர்களுக்கு வந்து விடும்.

தற்போது விடாமுயற்சியின் மேக்கிங் வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குள் விடாமுயற்சி சூட்டிங் முடித்துக்கொண்டு ஜூன் மாதத்தில் இருந்து தனது அடுத்த படமான குட் பேட் அக்லியில் இணைய உள்ளார் அஜித்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →