வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் ரிப்போர்ட்.. இரண்டு மடங்கு அதிகம் சம்பளம் வாங்கிய விஜய்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்த வரும் படம் வாரிசு. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷியாம், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, சங்கீதா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் சூட்டிங் வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியாக உள்ளது. இப்போது வாரிசு படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் தெரியவந்துள்ளது.

அதாவது வாரிசு படத்திற்கு மொத்தமாக 200 கோடி பட்ஜெட் செலவாகி உள்ளது. இதில் படத்தை தயாரிக்க கிட்டத்தட்ட 50 கோடி செலவு செய்து உள்ளனர். மேலும் விஜய் தவிர மற்ற நடிகர், நடிகைகளுக்கு சம்பளமாக 30 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய்க்கு படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக, அதாவது 120 கோடி வாரிசு படத்தில் நடித்ததற்காக சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது வாரிசு படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் போன்றவைகள் பல கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் மூலம் முதல்முறையாக தமன் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜயின் யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளது. இதற்காக விஜய் ரசிகர்கள் ஆர்வமாக தீபாவளியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.இப்படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →