எல்லா பக்கமும் சுத்தி அடிக்கிறாங்க தமிழ்நாட்டில விடக்கூடாது.. அஜித்துக்கு தெரியாமலேயே ரசிகர்கள் செய்த வேலை

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித்துக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் வெளிநாடுகளை பொருத்தவரையில் அஜித்தின் மார்க்கெட் அங்கு குறைவு தான்.

இதனால் தற்போது வரை சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் துணிவு படம் வியாபாரம் ஆகவில்லை. வெளிநாடுகளில் கோட்டை விட்டதுபோல தமிழ்நாட்டிலும் விடக்கூடாது என அஜித்துக்கு தெரியாமல் அவரது ரசிகர்கள் சில வேலைகள் செய்துள்ளனர்.

அதாவது அஜித் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என கூறியிருந்தார். மேலும் தனக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தையும் கலைத்து விட்டார். அதாவது சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு தான். இதற்கு மெனக்கெட்ட உங்கள் வேலையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்பதற்காக அஜித் இவ்வாறு செய்திருந்தார்.

அஜித் அவர் நடிக்கும் படத்தையும் ப்ரமோஷன் செய்ய மாட்டார். ஆனால் சமீபத்தில் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் அஜித் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது. ஆனால் அஜித் தரப்பிலிருந்து ஒரு நல்ல படமே அதற்கான பிரமோஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்போது நெல்லையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர் துணிவு படம் வெளியிடுவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். எப்படியும் துணிவு படத்தின் கலெக்ஷனை தமிழ்நாட்டில் அல்ல வேண்டும் என்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த மீட்டிங்கில் இருந்து வெளியான புகைப்படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். தலயே புரமோஷன் செய்யாத போது வால் எதற்கு ஆடுகிறது என கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள். சிலர் அஜித்துக்கு தெரிந்து தான் இது போன்ற விஷயங்களை அவரது ரசிகர்கள் செய்கிறார்கள் என்றும் கூறி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →