3 வயது கம்மியாக சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த இளம் நடிகை.. நல்ல வேல படம் சூப்பர் ஹிட்

நடிகைகள் பலர் படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு வாய்ப்பு இல்லாமல் போனால், அண்ணி, அம்மா, மாமியார் என துணை கதாபாத்திரங்களில் நடித்து வருவர். இன்னும் சில நடிகைகளோ சீரியலில் நடிக்க சென்று விடுவார். அப்படி சீரியலில் நடிக்கும் நடிகைகள், படங்களில் நடித்ததை விட அதிக புகழ் பெறுவர் அப்படிபட்ட சீரியல் நடிகை ஒருவர் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

அதுவும் சூர்யாவை விட மூன்று வயது சின்ன பெண்ணாக இருந்த அவர், சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தது தான் ஆச்சரியம். எந்த ஒரு நடிகையும் தன்னை விட வயது அதிகமாக இருக்கும் நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதை விரும்பமாட்டார்கள். அப்படி விரும்பாதபோதும் நடிக்க வந்த 5 ஆண்டுகளில் பட வாய்ப்புகள் சரி வர இல்லாததால், வயது அதிகமாக இருந்த சூர்யாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார் பிரபல 90 களின் கனவுக்கன்னி.

1994 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கருத்தம்மா திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான நடிகை தான் நடிகை ராஜஸ்ரீ .இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நீலக்குயில் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், பட வாய்ப்புகள் சரியாக வராததால் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார்.அங்கும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் பாலாவின் இயக்கத்தில் வெளியான சேது படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்திருப்பார்.

இப்படத்தில் பைத்தியக்கார பெண்ணாக நடித்த ராஜஸ்ரீயின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்ட நிலையில், தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா திரைப்படத்திலும் இவர் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தார். இப்படத்தில் அம்மாவாக நடிக்க விரும்பாத ராஜஸ்ரீ, பாலாவிடம் தான் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். இதற்கான காரணம் சூர்யாவை விட இவருக்கு 3 வயது குறைவு.

ஆனால் பாலாவின் பேச்சைக்கேட்டு சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தார் ராஜஸ்ரீ. நந்தா படப்பிடிப்பின் போது சூர்யாவை அண்ணா, அண்ணா என கூப்பிட்டுள்ளார் ராஜஸ்ரீ. சூர்யா இதற்கு கோபப்பட்டு என்னை பெயர் சொல்லி அழையுங்கள் என சொல்லிவிட்டு செல்வாராம். இப்படி பல சங்கடங்களை மனதில் வைத்துக்கொண்டு நடித்த ராஜஸ்ரீயின் ஊமை நடிப்பு இப்படத்தில் பெருமளவில் பேசப்பட்டது.

இருந்தாலும் இந்த படத்திற்க்கு பின் இவருக்கு தொடர்ச்சியாக அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவே இவருக்கு வாய்ப்பு வந்ததால் இவர் இப்படத்தைத் தொடர்ந்து வேறு படங்களில் பெரிதாக கமிட்டாகவில்லை. தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அமுதாவும்,அண்ணலட்சிமியும் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →