ஓடிடி யுகம் வந்தாலும் தியேட்டர் வசூல் தலை குனியல.. 2025 கலெக்ஷன் இதோ!

2025 Theatre collection : சமீபகாலமாக ஓடிடி தாக்கம் அதிகமாக இருப்பதால் தியேட்டரில் மக்கள் கூட்டம் வருவது குறைவு என்ற ஒரு சூழல் இருந்து வருகிறது. ஆனால் அது முற்றிலும் தவறு என்பதை சுட்டிக்காட்டும் வகையில் 2025 அரையாண்டில் தியேட்டரில் செய்த கலெக்சன் ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தியேட்டரில் மட்டும் 1202 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 60% அதிகம் என்று சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி, மதகஜராஜா, குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன் போன்ற படங்கள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அஜித்தின் குட் பேட் அக்லி உலக அளவில் 245 கோடியும், தமிழ்நாட்டில் 152 கோடியும், வெளிநாடுகளில் 67 கோடியும் வசூல் செய்தது. இதற்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் உலக அளவில் 152 கோடி மற்றும் தமிழ்நாட்டில் 82 கோடி வசூல் பெற்றது.

2025 ஆம் ஆண்டு அரையாண்டில் தியேட்டர் கலெக்ஷன் ரிப்போர்ட்

சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி உலக அளவில் 86 கோடி மற்றும் தமிழ்நாட்டில் 62 கோடி வசூலை பெற்றது. மதகஜ ராஜா 52 கோடியும், மாமன் படம் 48 கோடியும் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து கமல் நடிப்பில் வெளியான தக் லைஃப் படம் 98 கோடி வசூல் மட்டுமே பெற்றது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து விடாமுயற்சி படம் 138 கோடி, ரெட்ரோ 97 கோடி, வீரதீர சூரன் 68 கோடி வசூல் செய்தது. விஜய்யின் சச்சின் படம் ரீ ரிலீஸ் ஆன நிலையில் தமிழகத்தில் 10 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக் கொடுத்தது. இவ்வாறு தியேட்டரில் ஒரு நல்ல லாபத்தை தான் கொடுத்திருக்கிறது.

மேலும் அடுத்த ஆறு மாதங்களில் கூலி, மதராஸி, கருப்பு, இட்லி கடை மற்றும் லைக் ஆகிய படங்கள் வெளியாகுவதால் கண்டிப்பாக நல்ல வசூலை பெறும் என்று நம்பப்படுகிறது. எப்படியும் 2025 ஆம் ஆண்டு தியேட்டர் கலெக்ஷன் 3000 கோடியை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →