ப்ளூ ஸ்டாரில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த அசோக் செல்வன்

Blue Star – Ashok Selvan : ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுத்துள்ள இந்த படத்தில் அசோக் செல்வன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மேலும் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் காதல் மலர்வதற்கு காரணமாக ப்ளூ ஸ்டார் படம் தான் இருந்தது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நிலையில் நிஜ வாழ்க்கையிலும் கணவன், மனைவியாக இணைந்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் ப்ளூ ஸ்டார் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தது வேறு ஒரு ஹீரோ என இயக்குனர் ஜெயக்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்று கூறியிருக்கிறார்.

ப்ளூ ஸ்டார் படத்தின் கதையை முதலில் நடிகர் கவினிடம் தான் கூறியிருக்கிறார். அவருக்கும் இந்த படத்தின் கதை மிகவும் பிடித்த போய்விட்டது. மேலும் இந்த படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பு நிறுவனத்திடமும் கவின் ஜெயக்குமாரை அறிமுகம் செய்து வைத்தாராம்.

ஆனால் கவின் இப்போது டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆகையால் நிறைய படத்தில் அப்போது கவின் ஒப்பந்தமாகி இருந்ததால் ப்ளூ ஸ்டார் படத்தில் நடிக்க முடியாமல் போய் உள்ளது. இதைத்தொடர்ந்து தான் அசோக்செல்வனிடம் ப்ளூ ஸ்டார் கதையை ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

அவருக்கு அந்த கதை மிகவும் பிடித்த நிலையில் உடனடியாகவே நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். இப்போது அசோக்செல்வனின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் திருமண வாழ்க்கையிலும் ப்ளூ ஸ்டார் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →