இணையத்தில் லீக்கான பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட்.. இந்த வாரம் வெளியேற போகும் நபர் இவர்தான்

இரண்டாம் வாரத்தில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் நாமினேஷன் லிஸ்ட் இந்தவார தொடக்கத்தில் தயாராகி, அதில் அசீம், ராம் ராமசாமி, தனலட்சுமி, ரச்சிதா, சாந்தி, குயின்ஸி, விக்ரமன், மகேஸ்வரி, ஆயிஷா, நிவாஷினி, சிவின் கணேஷ் மற்றும் ஷெரினா ஆகிய 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த வார இறுதி நாளில் யார் வெளியேற போகின்றனர் என்பதை தெரிந்துகொள்ளும் ஓட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. இதில்  கடந்த வாரம் ஜிபி முத்துவிடம் சண்டைப் போட்டு முதல் வாரத்தில் இருந்தே அவரை அழவைத்த தனலட்சுமி தான் பிக்பாஸ் வீட்டைவிட்டு முதல் நபராக வெளியேற வேண்டும் என ஜிபி முத்து ஆர்மியே போர்க்கொடி தூக்கினர்.

இந்நிலையில் தனலட்சுமிக்கு ஆதரவாக ஏகப்பட்டப்பேர் சப்போர்ட் செய்து அவருக்கு ஓட்டுக்களை வாரி குவித்து கொண்டிருக்கின்றனர். ஆகையால் அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவதில்லை.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஓட்டிங் லிஸ்டில் சீரியல் நடிகை ரச்சிதா தான் அதிகம் ஓட்டை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடம் சீரியல் நடிகர் அசீம் பெற்றிருக்கிறார். 3-வது இடம் விக்ரமன், 4-வது இடம் குயின்ஸி, 5-வது இடம் ஆயிஷா பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றிருக்கின்றன. கடைசி இரண்டு இடம் விஜே மகேஸ்வரி, சாந்தி பெற்றுள்ளனர். டான்ஸ் மாஸ்டர் மற்றும் சீரியல் நடிகையான சாந்தி தான் இந்த ஓட்டிங் லிஸ்ட் கடைசி இடம் பிடித்து அவரை இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.

பெரும்பாலும் அதிக வயது உடையவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீண்டநாட்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால் இளம் வயதினரை மட்டுமே விரும்பும் பிக்பாஸ் ரசிகர்கள் இந்த முறையும் அதே எண்ணத்தில் சாந்திக்கு குறைந்த ஓட்டுகளை அளித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

bb-5-voting-list
bb-5-voting-list
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →