விஜய் இன்ஸ்டாகிராம் தொடங்க இதுதான் காரணம்.. கசிந்த உண்மை

தளபதி விஜய் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கி இருந்தார். இவர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே நிறைய ஃபாலோவர்ஸ் வந்து விட்டனர். அதன்படி இப்போதே விஜய் 7 மில்லியன் ஃபாலோவார்ஸை நெருங்க உள்ளார். மேலும் ஏற்கனவே விஜய் ட்விட்டரில் அக்கவுண்ட் வைத்திருந்தார்.

இந்த சூழலில் திடீரென விஜய் இன்ஸ்டாகிராமில் வர காரணம் என்ன என பல செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. மேலும் சில வருடங்களாகவே விஜய் அரசியலில் களம் காண இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தனது ரசிகர் கூட்டம் மூலம் இதற்கான ஆலோசனையும் விஜய் நடத்தி வருகிறார்.

கண்டிப்பாக அடுத்த சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தான் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார் என்ற செய்தி பரவுகிறது. ஆனால் பெரும்பாலும் அரசியல் பற்றிய செய்திகள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதனால் விஜய் இன்ஸ்டாகிராம் தொடங்கியதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது தன்னுடைய படங்களை புரொமோட் செய்வதற்காகத்தான் இன்ஸ்டாகிராமில் விஜய் அக்கவுண்ட் தொடங்கியுள்ளாராம். இப்போது லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய முதல் போஸ்ட் ஆக காஷ்மீரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

மேலும் விஜய் தனது இன்ஸ்டா பக்கத்தில் லியோ படத்தை பற்றிய நிறைய புகைப்படங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தன்னுடைய படங்களுக்கான அப்டேட்களை இன்ஸ்டாகிராமில் விஜய் கொடுக்க உள்ளார். மேலும் விஜய் அரசியலில் வருவது உறுதியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராம் அதற்காக தொடங்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இப்போது லோகேஷ் கூட்டணியில் விஜய் நடித்துவரும் லியோ படிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் அங்கு ரசிகர் கூட்டம் அதிகமாக உள்ளதால் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் முடித்துவிட்டு அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு மும்மரம் காட்டி வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →