நானே வருவேன் ப்ரமோஷனுக்கு வராத தனுஷ்.. உச்சாணிக் கொம்பில் நின்றதற்கு காரணம் இதுதான்

சமீபத்தில் தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆரம்பத்தில் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் காரணமாக நானே வருவேன் படத்தின் வசூல் அடி வாங்கியது.

மேலும் நானே வருவேன் படத்தில் தனுஷின் நடிப்பு அபரிவிதமாக இருந்தது என அனைவரும் பாராட்டி இருந்தனர். ஏனென்றால் இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டிலும் தனுஷ் வித்தியாசம் காட்டு இருந்தார். அதுமட்டுமின்றி செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒருவேளை நானே வருவேன் படம் மற்ற படங்களுக்கு போட்டியாக இல்லாமல் வெளியிட்டு இருந்தால் ஓரளவு நல்ல வசூலை பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால் மணிரத்தினம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஏகப்பட்ட திரை பிரபலங்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்திருந்தார்.

இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்தார்கள். அதேபோல் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததால் எல்லா தியேட்டர்களிலும் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட்டனர். இதனால் நானே வருவேன் படத்திற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே யோசித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவிடம் தனுஷ் கூறியுள்ளார்.

அதாவது நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நல்ல படமாக இருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் பார்ப்பார்கள் என தாணு ரிலீஸ் தேதியை மாற்ற மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த தனுஷ் நானே ஒருவன் பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளவில்லையாம்.

மேலும் தயாரிப்பாளர் தாணு ஆயுத பூஜை தொடர் விடுமுறை வருவதால் இதை விட்டு விடக்கூடாது என நினைத்து நானே வருவேன் படத்தை வெளியிட்டார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தால் தனுஷ் நினைத்தது போல நானே வருவேன் படம் காலை வாரிவிட்டது.

இது பற்றி சமீபத்தில் செல்வராகவனிடம் கேட்கும்போது எந்த பட பிரமோஷனுக்கும் தனுஷ் கலந்து கொள்ள மாட்டார் என கூறியிருந்தார். மேலும் தனுஷ் வர வேண்டும் என்றுதான் எங்களுக்கு ஆசை ஆனால் அவர் வரவில்லை என்பது போல கூறி இருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →