டைட்டிலுக்காக மெனக்கெட்ட வினோத்.. துணிவு வந்த கதை இதுதான்

வினோத் தற்போது அஜித்தை வைத்து துணிவு என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். பல நாட்களாக இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்படாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தான் பட குழு டைட்டிலை போஸ்டர் உடன் அறிவித்தனர். அது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இப்படத்திற்கு துணிவு என்ற பெயர் எப்படி வைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது பொதுவாக அஜித் நடிக்கும் பல திரைப்படங்கள் வி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வகையில் இருக்கும். வீரம், விசுவாசம் போன்ற பல திரைப்படங்களை நாம் உதாரணத்திற்கு சொல்லலாம்.

அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கும் வைராக்கியம், வியூகம் போன்ற தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தலைப்புகளை பார்த்த அஜித்திற்கு அவ்வளவாக பிடிக்கவில்லையாம். அதனால் அவர் வேறு ஏதாவது யோசியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு முன்னதாகவே வினோத் வலிமை திரைப்படத்தின் போது அடுத்த படத்திற்கான டைட்டில் துணிவு என்று வைக்கலாம் என கூறி இருக்கிறார். அந்த சமயத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானதால் வேறு தலைப்பு வைப்பதற்கு பட குழு முடிவு செய்திருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

ஏனென்றால் அஜித் மற்றும் சூர்யா இருவருக்கும் ஆகாது. அதனால் பல பெயர்களை அவர்கள் பரிசீலித்துள்ளனர். அவை எதுவும் பிடிக்காததால் அஜித் துணிவு என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கிறது. அதனால் அதையே வைத்து விடலாம் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு ஜாதக ரீதியாக சில விஷயங்களும் நடத்தப்பட்டு இந்த தலைப்பு ஒரு வழியாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் டைட்டில் அறிவிப்புக்கான போஸ்டரும் ஸ்பெஷல் ஆக தயார் செய்யப்பட்டு தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஒருவகையில் படத்தின் கதைக்கும் இந்த தலைப்புக்கும் ரொம்பவே பொருத்தம் என்று திரை உலகில் பேசப்பட்டு வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →