2025 காதலர் தினத்தில் வெளியாகும் 3 படங்கள்.. ரேசில் விட்டுக் கொடுக்காத தனுஷ்

Dhanush : அடுத்த வருடம் 2025 இல் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு மூன்று படங்கள் வெளியாக இருக்கிறது. எப்போதுமே காதலர் தின கொண்டாட்டத்தில் புது படங்களை பார்க்க பலரும் விரும்புவார்கள். இதை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் பிப்ரவரி 14 படங்களை வெளியிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் மூன்று காதல் படங்கள் வெளியாக இருக்கிறது. எல்லா பண்டிகை ரேசிலும் கலந்து கொள்ளும் தனுஷ் காதலர் தினத்தையும் விடவில்லை. அந்த வகையில் தனுசே இயக்கி, நடிக்கும் படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

இந்த படத்தை தனுஷ் தனது வொண்டர் பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். அதோடு தனுஷ் சகோதரியின் மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக அனுகா சுரேந்தரன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

2025 இல் காதலர் தினத்தில் வெளியாகும் மூன்று படங்கள்

இந்த படம் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினதன்று வெளியாகிறது. அடுத்ததாக தனுசு உடன் அதே நாளில் போட்டி போடுகிறார் இயக்குனர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரதீப் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வருகிறது டிராகன் படம்.

இப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கேஎஸ் ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படமும் காதலர்தின வெளியீட்டுக்காக இப்போது தயாராகி வருகிறது. இப்படத்தை ஓமை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஒன்ஸ்மோர் படமும் காதலர் தினத்திற்கு வெளியாகிறது. அறிமுக இயக்குனரான விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment