தளபதிக்கு மட்டும் இல்ல இவங்களுக்கும் இன்னைக்கு ஸ்பெஷல் டே தான்.. 90ஸ் கனவு தேவதைக்கு ஹாப்பி பர்த்டே 

Vijay: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தன்னுடைய 51வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு ஜனநாயகன் பட குழு அசத்தலான ஒரு வீடியோவை வெளியிட்டது. 

அதேபோல் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை அனைவரும் தளபதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இன்றி ரசிகர்களும் ஸ்பெஷல் போஸ்டரை தயார் செய்து வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க இன்று இன்னும் சில பிரபலங்களுக்கும் பிறந்தநாள் தான். ஆனால் சோசியல் மீடியாவை தளபதியின் ரசிகர்கள் ஆக்கிரமித்துள்ளதால் இது அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. 

90ஸ் கனவு தேவதைக்கு ஹாப்பி பர்த்டே 

அதன்படி அடுத்த சிவகார்த்திகேயன் என அழைக்கப்படும் கவின் இன்று தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதேபோல் இளம் நாயகி மமிதா பைஜூ தன்னுடைய 24வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சூர்யா 46 பட குழுவினர் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இவர்களைத் தவிர 90ஸ் கனவு தேவதையான தேவயானியும் இன்று தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆனால் இதில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.

என்னவென்றால் விஜய் பிறந்த அதே வருடம் தான் இவரும் பிறந்துள்ளார். அதன்படி இவருக்கும் இது 51 வது பிறந்தநாள் தான். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், டீச்சர் என பல முகங்கள் இவருக்கு உண்டு.

செலிபிரிட்டி என்ற பந்தா இல்லாமல் எளிமையாக இருக்கும் இவரை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். தற்போது இவர் சரத்குமாருடன் இணைந்து 3BHK படத்தில் நடித்துள்ளார்.

பட குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தேவயானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படியாக இன்று தளபதியுடன் இணைந்து இவர்களும் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →