இயக்குநர்களை நம்பி மோசம் போன டாப் 3 ஹீரோக்கள்.. மரண பயத்தில் வாத்தி தனுஷ்

நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவையான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில், தெலுங்கு சினிமா இயக்குனர்களை நம்பி இரு மொழிகளுக்கும் படம் எடுத்து, அதில் நடித்து மொக்கை வாங்கிய தமிழ் நாயகர்களையும் அந்த படங்களையும் காணலாம்.

பிரின்ஸ்: சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் பலத்த அடிவாங்கிய திரைப்படம், பிரின்ஸ். தெலுங்கு டைரக்டர் அனுதிப் சொன்ன கதையை சிவகார்த்திகேயன் கேட்டாரா தெரியாது, ஆனால் ஜோடி ஒரு வெளிநாட்டு நடிகை என்றதும் ஓகே சொல்லிவிட்டார் போல. படம் ரொம்பவும் மோசமாக இருந்தது. அதனால் வசூலில் பின்தங்கியது. இந்த தோல்வியை டான் மூலம் ஓரளவுக்கு சரி செய்துகொண்டார் நம்ம எஸ்.கே.

வாரிசு: சமீபத்திய பெரிய ஏமாற்றம் வாரிசு. விஜய் படங்களை மக்கள் ரசிப்பது அவரது ஆட்டம், ஆக்சன் காட்சிகளுக்காக. அதைவிட்டு அவரை வைத்து குடும்ப கதை எடுத்தார் வம்ஷி படிப்பள்ளி. முற்றிலும் குடும்ப கதையாகவும் எடுக்காமல், விஜய்க்காக மாஸ் காட்சிகளை சேர்த்ததும் சரியாக அமையவில்லை. மேலும் பல விமர்சகர்கள் சொன்ன குற்றசாட்டு, படம் ஒரு தொலைக்காட்சி சீரியல் போன்ற உணர்வை கொடுத்தது. இன்னொருமுறை நம்ம தளபதி இது போன்ற ஒரு கதையில் நடிக்கமாட்டார் என்று நம்புவோம்.

வாத்தி: தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் இந்த வாரம் வெளியாகும் படம் வாத்தி. பள்ளிக்கூடங்களில் நடக்கும் பிரச்சனைகளை கூற முயல்கிறது இந்த படம். படத்தின் இயக்குனர் வெங்கி ஆடலூரி.தற்போது படத்தை பற்றி விமர்சனம் கூற முடியாவிட்டாலும், படத்தின் ட்ரைலர் பார்த்தபோது திரைக்கதை நேர்த்தியும், வலுவான கதையும் இருப்பதாக தெரியவில்லை. பொறுத்திருந்து பாப்போம்.

தெலுங்கு இயக்குனர்கள் அதிகம் மசாலாவுக்கு ஏற்றவாறு கதை அமைப்பவர்கள். அவர்களை நம்பி நமது நடிகர்கள் இறங்குவது சரியான தேர்வாக இருக்காது என்பதை தான் இந்த திரைப்படங்கள் நமக்கு கூறுகின்றன.

அதனால் தமிழ் நடிகர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுக்கும் சேர்ந்து படம் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஏதாவது ஒரு மொழிக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, அந்த மொழிக்கான இயக்குனரை தேர்ந்து நடித்தால் நிச்சயம் ஹிட் அடிக்கலாம். இல்லாவிட்டால் இதுபோல கொஞ்சம் மொக்கை வாங்க வேண்டியது இருக்கும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →