ஏடாகூடமாக இன்ஸ்டா ஸ்டோரி போட்டு இருக்கும் த்ரிஷா.. மாநாடு நடக்கிற வரைக்கும் கொஞ்சம் சும்மா இரும்மா!

Tamilaga Vettri Kazhagam: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதில் விஜய் ரொம்பவே கவனமாக இருக்கிறார். தளபதிக்கு எந்த கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பதில் அவருடைய தொண்டர்களும் கவனமாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நேரத்தில் நடிகை திரிஷா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யுடன் த்ரிஷா இணைந்து ஒன்று, இரண்டு படங்களில் நடித்த போது சைலன்டாக கிசுகிசு ஒன்று கிளம்பி வந்த இடம் தெரியாமல் போனது.

மாநாடு நடக்கிற வரைக்கும் கொஞ்சம் சும்மா இரும்மா!

அதன் பின்னர் இருவரும் லியோ படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் மீண்டும் அந்த வதந்திக்கு உயிர் கொடுத்தார்கள். த்ரிஷாவும் வதந்திகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அவ்வப்போது சில சில்மிஷ விஷயங்களை செய்து வந்தார்.

விஜய் ரசிகர்களே கோபப்படும் அளவுக்கு சில நேரங்களில் த்ரிஷா நடந்து கொண்டார். அதிலும் விஜய் அரசியலுக்கு வரப்போகிறேன் என்றதும் இந்த வதந்தியை இன்னும் அதிகமாக்கினார்கள். கடந்த சில மாதங்களாக இந்த வதந்தி காணாமல் இருந்த நிலையில் மாநாடு நடக்க இருக்கும் நேரத்தில் த்ரிஷா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை விஜய் உடன் இணைத்து மீண்டும் கதை கட்டி வருகிறார்கள்.

TVK
TVK

திரிஷா ஸ்பெயின் நாட்டில் இருக்கிறார் போல. அங்கு தான் தேன்குழல் சாப்பிடுவதாக அதை புகைப்படம் எடுத்து அந்த நாட்டின் கொடியை பக்கத்தில் வைத்திருக்கிறார். இது பார்ப்பதற்கு தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி இருப்பதால் திரிஷா விஜய் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக பேசி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment