கடைசிவரை அரசியல் ஆசை இல்லாமல் மறைந்த 2 ஜாம்பவான்கள்.. எம்ஜிஆர் அழைத்தும் பிரயோஜனம் இல்ல

எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி தொடங்கி தற்போது உதயநிதி ஸ்டாலின் வரை சினிமாவில் இருந்த அரசியலில் நுழைந்தவர்கள். சினிமாவில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவை வைத்து அரசியலில் கால் பதித்து இருந்தனர். குஷ்பு, ரோஜா போன்ற பல நடிகைகளும் அரசியலில் செயல்பட்டு வருகின்றனர்.

எம்ஜிஆரின் பங்களிப்பு சினிமாவில் எவ்வளவு இருந்ததோ அதைவிட ஒருபடி மேலாகவே அரசியலிலும் இருந்தது. அதுமட்டுமல்லாமல் தற்போதும் எம்ஜிஆருக்காகவே அதிமுகவில் வாக்களிக்கும் மக்களும் தமிழகத்தில் உள்ளனர். இவ்வாறு எம்ஜிஆர் அடித்தட்டு மக்கள் மனதில் ஆழமாக பதிந்து உள்ளார்.

மேலும் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு நிகராக பார்க்கப்பட்ட சிவாஜியும் பல அரசியல் கட்சிகளுடன் நீண்ட காலம் உறவை தொடர்ந்திருந்தார். இவ்வாறு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பலர். மேலும் ஜெயலலிதாவும் எம்ஜிஆர் பின்னணியில் இருந்த அரசியலுக்கு வந்தார்.

ஆனால் அந்த காலகட்டத்தில் அரசியல் மீது ஈடுபாடு இல்லாத இரண்டு நடிகர்கள் இருந்துள்ளனர். ஏன் எம்ஜிஆரே இவர்களை அரசியலுக்கு அழைத்தோம் வர மறுத்துள்ளனர். அதில் ஒருவர் நடிகர் ஜெமினி கணேசன். பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் தனது ரசிகர்களின் மூலம் எளிதில் அரசியலில் நுழைந்து இருக்க முடியும்.

ஆனால் ஜெமினி கணேசன் காங்கிரஸ் கட்சியின் எதிர்சேவை விருப்பம் கொண்டிருந்தாராம். ஆனாலும் அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. மேலும் அவருக்கு பலமுறை அழைப்பு வந்தும் அதை மறுத்து விட்டாராம். ஜெமினி கணேசன் போல் நடிகர் ஜெய்சங்கருக்கும் அரசியல் ஆர்வம் இல்லையாம். இவர் ஹீரோ, வில்லன் என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடிக்கக்கூடியவர்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஜெய்சங்கருக்கு பட வாய்ப்பு குறையத் தொடங்கியதும் பலரும் அரசியலில் ஈடுபட வற்புறுத்தி உள்ளனர். ஆனால் ஜெய்சங்கர் மறுத்துவிட்டாராம். மேலும் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் ஜெய்சங்கர் பல படங்களில் நடித்திருப்பதால் திமுக மீது ஈடுபாடு இருந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →