21 வருடங்கள் கழிந்தும் மறக்க முடியாத துக்கம்.. வலியோடு போட்டோவை வெளியிட்ட சிம்ரன்

ஒரு காலத்தில் திரையுலகையே தன்னுடைய நடிப்பாலும், அற்புதமான நடனத்தாலும் கட்டி போட்டிருந்த சிம்ரன் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கையில் பல திரைப்படங்கள் இருக்கிறது. அதில் துருவ நட்சத்திரம் உட்பட சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

இந்நிலையில் சிம்ரன் நேற்று தன் சோசியல் மீடியா பக்கத்தில் வலியுடன் கூடிய ஒரு பதிவை போட்டிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்கள் ஆறுதல்களை கூறி வருகின்றனர். அதாவது சிம்ரன் தன்னுடைய நடிகை மோனலின் நினைவு தினத்தை முன்னிட்டு தாங்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு இருந்தார்.

மேலும் என் அழகான தங்கையை ரசிகர்களாகிய நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதை பார்த்த பலரும் மோனல் நடித்த படங்கள் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். நடிக்க வந்த புதிதிலேயே விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வந்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தை பருவத்தில் இருக்கும் புகைப்படம்

simran-monal
simran-monal

இந்த விவகாரம் அப்போது திரையுலகில் பெரும் அதிர்வலையையே ஏற்படுத்தியது. மேலும் அவர் காதல் தோல்வியால் மரணமடைந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது அவர் இறந்து நேற்றுடன் 21 வருடங்கள் முடிந்து விட்டது. அதாவது தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் மோனல் உயிரிழந்தார்.

அதனாலேயே நேற்று சிம்ரன் தன்னுடைய தங்கையின் நினைவுகளை பகிர்ந்திருந்தார். அதில் இருவரும் குழந்தை பருவத்தில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். மோனல் இறந்து இதனை வருடங்கள் கழிந்த பிறகும் அந்த துக்கம் சிம்ரனை விட்டு கொஞ்சம் கூட மறையவில்லை.

சிம்ரன் – மோனல்

monal-simran
monal-simran

அதை வெளிப்படுத்தும் விதமாகவே அவர் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதை பார்த்த பலரும் தைரியமாக இருங்கள் என்றும் உங்கள் தங்கை உங்களுடனே இருப்பார் என்றும் சிம்ரனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தற்போது இவர் சப்தம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது சிம்ரனின் 50வது தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →